தொகுதிகள்: வந்தவாசி (தனி)

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
திருவண்ணாமலை
வாக்காளர்கள்
:
222362
ஆண்
:
111420
பெண்
:
110939
திருநங்கை
:
3

வந்தவாசி தொகுதி பல்வேறு வரலாற்று சிறப்புகளை கொண்டதாகும். மன்னர்கள் கோட்டை கட்டி ஆண்டதும், 1872-ல் நடந்த போரில் ஆங்கிலேயர்கள் பிரெஞ்சுக்காரர்களை வெற்றி கொண்டு ஆங்கிலேயே ஆதிக்கத்திற்கு அடிகோலியதும்...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

வந்தவாசி-காஞ்சீபுரம் சாலை விளாங்காடு கூட்டு சாலையிலிருந்து உத்திரமேரூர் சாலை வரை ரூ.18 3/4 கோடி செலவில் சாலை அமைக்கப்பட்டது. வழூர் கிராமத்தில் சுகநதி ஆற்றின் மீது ரூ.3 கோடியே 57 லட்சம் செலவில் மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. முறுக்கேரி கிராமத்தில் ரூ.1 கோடியே 20 லட்சம் செலவில் சாலையில் மேம்பாலம் கட்டப்பட்டது. தென்னாங்கூர் கல்லூரிக்கு புதிய கட்டிடம் கட்ட ரூ.8 1/4 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டிட வேலைகள் நடைபெற்று வருகின்றன. இக்கல்லூரிக்கு ரூ.1 கோடியே 45 லட்சம் செலவில் மாணவர் விடுதி கட்டி திறக்கப்பட்டுள்ளது. வந்தவாசி புதிய பஸ் நிலையம் அருகில் ரூ.5© கோடி செலவில் அடுக்குமாடி கட்டிடங்கள், வந்தவாசி நகராட்சி பகுதிக்கு 3-வது குடிநீர் திட்டம் ரூ.13 கோடியில் நிறைவேற்றப்பட்டுள்ளது. வந்தவாசி-வெண்குன்றம் கிராமத்தில் மலை மீது உள்ள தவளகிரீஸ்வரர் கோவிலுக்காக மலை அடிவாரத்தில் பக்தர்கள் தங்கும் விடுதி, மலை மீது பாதுகாப்பு கம்பி அமைக்க ரூ.65லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. கீழ்கொடுங்காலூர் -அரசாணிமங்கலம் வரையில் ரூ.3 கோடியே 35லட்சம் செலவில் புதிய சாலை, சட்டத்தாங்கல்- கோழிப்புலியூர் கிராமம் வரை ரூ.7 கோடி செலவில் சாலை, வந்தவாசி காந்தி சாலையில் ரூ.1 கோடியே 27லட்சம் செலவில் சிமெண்டு சாலை ஆகியவை அமைக்கப்பட்டது. மாம்பட்டு கிராமத்தில் ரூ.70லட்சம் செலவில் புதிய துணை மின்நிலையம் அமைக்கப்பட்டது. வந்தவாசியில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு சேமிப்பு கிடங்குகள் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டன. - எம்.எல்.ஏ. வே.குணசீலன்

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

தி.மு.க. 6 முறை வென்றுள்ளது (2 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

அ.தி.மு.க. 4 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

காங்கிரஸ் 1 முறை வென்றுள்ளது

பா.ம.க. 1 முறை வென்றுள்ளது

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

Setting up procurement centres and spinning mill will be helpful.
M.A.Ethiraj (Nalleri)
பழைய பேருந்து நிலையாத்தை மீண்டும் இயக்க வேண்டும். அனைத்து ஊர்களுக்கும் பேருந்துகள் இயக்க வேண்டும். முக்கியமாக செங்கல்பட்டு அரசு மருத்துவ மனைக்கு செல்வதர்க்கு பஸ்கள் இயக்க வேண்டும். வந்தவாசி அரசு மருததுவமனை தரம் உயர்த்த வேண்டும்.
ர.பஷீர் அஹ்மத் (வந்தவாசி)

முக்கிய எதிர்பார்ப்புகள்

வந்தவாசி மருத்துவமனைக்கு கூடுதல் டாக்டர்கள், உரிய மருந்துகள், உரிய டெக்னீஷியன்களை வழங்கி அதன் தரத்தை உயர்த்த வேண்டும். வந்தவாசிக்கு புற வழிச்சாலையை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.