iFLICKS தொடர்புக்கு: 8754422764

Breaking News
திமுக

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் சண்முகம் பதில் அளித்துள்ளார்.

குடிமராமத்து பணியில் ஊழல்-முறைகேடு: வைகோ குற்றச்சாட்டு

குடிமராமத்து பணியில் ஊழலும் முறைகேடுகளும் தொடர்ந்து நடைபெற்று வருவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டி உள்ளார்.

அ.தி.மு.க. எம்.பி.க்கள் அமளி- மாநிலங்களவை ஒத்திவைப்பு

தபால் துறை தேர்வில் தமிழ் புறக்கணிக்கப்பட்டதைக் கண்டித்து அதிமுக எம்பிக்கள் மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டதால் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

தங்க தமிழ்செல்வன் ஆதரவாளர்கள் திமுகவில் இணையும் விழா - முக ஸ்டாலின் பங்கேற்பு

தங்க தமிழ்செல்வன் ஆதரவாளர்கள் திமுகவில் இணையும் விழாவில் முக ஸ்டாலின் கலந்துக் கொள்கிறார்.

உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையத்திற்கு ஆளுநர் கட்டளையிட வேண்டும்- மு.க. ஸ்டாலின்

உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையத்திற்கு ஆளுநர் கட்டளையிட வேண்டும் என மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

முக ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அன்பகத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது.

தமிழில் தபால் துறை தேர்வை நடத்த வேண்டும்- பாராளுமன்றத்தில் அதிமுக, திமுக வலியுறுத்தல்

மத்திய அரசு சமீபத்தில் நடத்திய தபால் துறை தேர்வை ரத்து செய்துவிட்டு, தமிழில் தேர்வை நடத்த வேண்டும் என பாராளுமன்றத்தில் அதிமுக மற்றும் திமுக எம்பிக்கள் வலியுறுத்தினர்.

காமராஜர் மணிமண்டபம் திறப்பு- சரத்குமாருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜருக்கு மணிமண்டபத்தை கட்டிய சரத்குமாருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழில் தபால் தேர்வை வலியுறுத்தி சட்டசபையில் இருந்து திமுக வெளிநடப்பு

தபால் தேர்வை தமிழில் எழுத அனுமதிக்க கோரி சட்டசபையில் தீர்மானம் கொண்டு வர சபாநாயகர் அனுமதி மறுத்ததால் தி.மு.க. உறுப்பினர்கள் இன்று வெளிநடப்பு செய்தனர்.

அமமுக மாநில அமைப்பு செயலாளர் ஞானசேகரன் தி.மு.க.வில் இணைந்தார்

வேலூரை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.வும், அ.ம.மு.க. மாநில அமைப்பு செயலாளருமான ஞானசேகரன் தி.மு.க.வில் இணைந்தார்.

உள்ளாட்சி தேர்தல் வழக்கு: அக்டோபர் 31ம் தேதி வரை அவகாசம் கேட்டது மாநில தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில், அக்டோபர் 31-ம் தேதி வரை அவகாசம் வழங்கும்படி மாநில தேர்தல் ஆணையம் கேட்டுள்ளது.

மேல்முறையீடு பற்றி கேள்வி கேட்டதால் ஆவேசமடைந்த வைகோ

தேசத்துரோக வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்திருப்பது ஏன்? என கேட்பதில் உள்நோக்கம் இருப்பதாக வைகோ தெரிவித்தார்.

தமிழக வளர்ச்சிக்கு எதிராக ஸ்டாலின் செயல்படுகிறார் - தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டு

தமிழக வளர்ச்சிக்கு எதிராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செயல்படுகிறார் என்று தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டி உள்ளார்.

தபால் துறை தேர்வில் தமிழ் புறக்கணிப்பு -மு.க.ஸ்டாலின் கண்டனம்

தபால் துறை தேர்வு வினாத்தாள்கள் இனி இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே என தபால்துறை அனுப்பிய சுற்றறிக்கைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தேசத்துரோக வழக்கில் சிறை தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வைகோ அப்பீல்

தேசத்துரோக வழக்கில் விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை எதிர்த்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

வனத்துறை நிலத்தை ஆக்கிரமித்ததாக புகார்- சேலம் திமுக எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திபன் மீது வழக்கு

வனத்துறை நிலத்தை ஆக்கிரமித்ததாக புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து சேலம் எம்.பி. எஸ்.ஆர். பார்த்திபன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஜூலை 15ல் நடைபெறும் - அன்பழகன் அறிவிப்பு

தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 15-ம் தேதி நடைபெற உள்ளது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.

பதவி ஏற்ற ஒரு வாரத்தில் உதயநிதி ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை

பதவி ஏற்ற ஒரு வாரத்தில் நாகை மற்றும் மதுரை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்களை மாற்றி உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

வேலூர் பாராளுமன்ற தொகுதியில் வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது- ஏசி சண்முகம் மனு தாக்கல்

வேலூர் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. முதல் நாளில் அதிமுக சார்பில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம் வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.

நாத்திகவாதி, ஆத்திகவாதி என்ற இரட்டை வேடம் எதற்கு? - அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி

அத்திவரதரை தரிசிக்க சிறப்பு தரிசன ‘பாஸ்’ கேட்டு தி.மு.க. நிர்வாகிகள் கடிதம் எழுதி இருப்பது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் டி.ஜெயக்குமார், நாத்திகவாதி, ஆத்திகவாதி என்ற இரட்டை வேடம் எதற்கு? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

2

"