தொகுதிகள்: அரூர் (தனி)

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
தர்மபுரி
வாக்காளர்கள்
:
225327
ஆண்
:
114305
பெண்
:
111015
திருநங்கை
:
7

தர்மபுரி மாவட்டத்தின் வடகிழக்குப்பகுதியில் அமைந்துள்ள அரூர் சட்டசபை தொகுதி அதிக வனப்பகுதிகளை கொண்டது. 1952-ம் ஆண்டு இந்த தொகுதி முதல் தேர்தலை சந்தித்தது. இந்த தொகுதியில் 1952-ம் ஆண்டு மற்றும் 1957-ம் ...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

சட்டசபை உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ஒதுக்கப்பட்ட ரூ.1 கோடி நிதிபங்களிப்புடன் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ரூ.7 கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் அரசு கலைக்கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது. கெலவள்ளியில் சிட்கோ தொழிற்பேட்டை அமைக்க அரசாணை பெறப்பட்டு நிலமும் கையகப்படுத்தப்பட்டுள்ளது. தர்மபுரி-திருவண்ணாமலை மாவட்டங்களை இணைக்கும் வகையில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ.6 கோடியே 80 லட்சம் மதிப்பில் பெரியபாலம், அனுமன்தீர்த்தத்தில் ரூ.6 கோடி மதிப்பில் தென்பெண்ணை ஆற்று பாலம் என பல்வேறு பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. தொகுதி முழுவதும் 43 பகுதிநேர ரேஷன்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. கிராமப்புறங்களில் 76 சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.- எம்.எல்.ஏ. டில்லிபாபு

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

காங்கிரஸ் 2 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

தி.மு.க. 2 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

சி.பி.ஐ. (எம்) 5 முறை வென்றுள்ளது (2 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

அ.தி.மு.க. 3 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

Saving the excess rain water in the dams and providing it for irrigation will be useful.
Ramajayam (Echambadi)

முக்கிய எதிர்பார்ப்புகள்

மழைக்காலங்களில் உபரிநீரை ஏரிகளில் தேக்கி வைத்து விவசாய பணிகளுக்கு பயன்படுத்துவதற்கான திட்டம் இதுவரை செயல்படுத்தப்படவில்லை. அரூர் தொகுதியை சேர்ந்த விவசாயிகளின் உற்பத்தி பொருட்களை பாதுகாத்து விற்பனை செய்வதற்கான குளிர்சாதன வசதியுடன் கூடிய கிடங்கு வசதி ஏற்படுத்தப்பட வேண்டும். அரூர் தொகுதியில் உள்ள கனிம வளங்கள் முறையாக பயன்படுத்தப்படவில்லை. இந்த பகுதியில் பூமிக்கடியில் படிந்து கிடக்கும் மாலிப்டீனம் உலோகத்தை வெட்டியெடுக்கும் தொழிற்சாலைகளை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை. வனப்பகுதிகள் அதிகம் கொண்ட இந்த தொகுதியில் வனம் சார்ந்த சிறப்பு தொழில்திட்டங்கள் குறிப்பிடத்தக்க அளவில் செயல்படுத்தப்படவில்லை.