தொகுதிகள்: அணைக்கட்டு

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
வேலூர்
வாக்காளர்கள்
:
231517
ஆண்
:
113745
பெண்
:
117771
திருநங்கை
:
1

வேலூர் மாவட்டத்தில் உள்ள 13 சட்டசபை தொகுதிகளில் அணைக்கட்டு தொகுதி பரப்பளவில் பெரிய தொகுதியாகும். அணைக்கட்டு தொகுதியில் வேலூர் விருபாட்சிபுரம், கணியம்பாடி, கொணவட்டம், அரியூர், பொய்கை, ஊசூர்,...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

ரூ.10 கோடி வரைக்கும் தொகுதிக்கு நிதி ஒதுக்கப்பட்டு தார்சாலைகள், குடிநீர் தொட்டிகள், பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறைகள், சுற்றுச்சுவர் அமைத்தல், மேலும் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு ரூ.2Ñ கோடி நிதியும், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அரங்கம் அமைக்க ரூ.25 லட்சமும் ஒதுக்கப்பட்டது. நோயாளிகளுக்கு “டயாலிசிஸ்” முறையை கொண்டு வந்தது. 70 முதல் 80 சதவீதம் வரை தீப்புண்ணால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் நவீன தீப்புண் சிகிச்சை பிரிவு தொடக்கி வைக்கப்பட்டது. அணைக்கட்டு தொகுதிகளில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையத்திலும் அத்தியாவசிய உயிர் காக்கும் மருந்துகள் இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் குடிநீர் தட்டுப்பாடு இருந்த நேரத்தில் நாகநதி ஆற்றில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் வரை குழாய் அமைத்து நிரந்தர குடிநீர் பிரச்சினையை போக்கி உள்ளேன். - எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த ம.கலையரசு

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

அ.தி.மு.க. 6 முறை வென்றுள்ளது (2 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

தி.மு.க. 3 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

பா.ம.க. 1 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

அரசு கலை கல்லுரி மற்றும் நிலையான குடிநீர் வசதி, ஏன் என்றல் இது மேடான பகுதி. கோடை காலங்களில் இங்கு அதிகமான குடி நீர் தட்டுப்பட்டு ஏற்றபடுகிறது ஆதற்கு நீரந்தர தீர்வு ஒகேனகல் கூட்டு குடிநீர் திட்டம் இப்பகுதிகல்ளில் நீரிவேற்ற பட வேண்டும்,,!
முகிலன் அ (புத்தூர்)
The roads to the mountain villages are too narrow and should be widened.
V.Nandhini (Kurumalai)
இது பா ம க கோட்டை- முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் துரோகி வெற்றி பெற கூடாது என்பது இந்த தொகுதி மக்களின் எதிர்பார்ப்பு
palani (sembedu)

முக்கிய எதிர்பார்ப்புகள்

குருமலை, பீஞ்சமந்தை, பாலம்பட்டு ஆகிய ஊராட்சிகள் மலையில்தான் உள்ளன. இவர்களுக்கு அடிப்படை தேவையான தொழில் இல்லை. எங்கள் பகுதிக்கு தார்சாலை அமைக்கப்படவில்லை. நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து வரவேண்டும் என்றால் தூளிகட்டிதான் கொண்டு வரவேண்டும். பெரிய தொழிற்சாலைகளோ, நிறுவனங்களோ இல்லாத இந்த தொகுதியில் விவசாயம் மட்டுமே பிரதான தொழிலாக உள்ளது. அணைக்கட்டு தாலுகா அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இன்னும் தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படவில்லை.