தொகுதிகள்: ஆவடி

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
திருவள்ளூர்
வாக்காளர்கள்
:
398206
ஆண்
:
200029
பெண்
:
198089
திருநங்கை
:
88

பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டிருந்த ஆவடி, கடந்த 2011-ம் ஆண்டு நடந்த தொகுதி மறுசீரமைப்பின் போது பிரிக்கப்பட்டு ஆவடி சட்டமன்ற தொகுதியாக புதிதாக உருவாக்கப்பட்டது. ஆவடி நகராட்சியின் 48...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

ஆவடி தனி தாலுகாவாக அறிவிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. திருநின்றவூர் மக்களின் கோரிக்கையை ஏற்று மின்சார சுடுகாடு அமைக்கப்பட்டு உள்ளது. ஆவடி நகராட்சி அலுவலகம் அருகே காய்கனி வணிக வளாகம் கட்டி கொடுத்து உள்ளேன். இதுவரை இல்லாத அளவுக்கு ஆவடி நகராட்சிக்கு அதிக நிதியை பெற்றுத் தந்துள்ளேன். ஆவடியில் இருந்து சுற்று வட்டார பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல மினி பஸ்கள் அதிக அளவில் இயக்க ஏற்பாடு செய்து உள்ளேன். ஆவடியில் இருந்து நேரடியாக தி.நகர், மந்தைவெளிக்கு செல்ல பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்து உள்ளேன். தொகுதியில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு கட்டிட வசதி, பூங்காக்கள் மற்றும் அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து உள்ளேன். எனது தொகுதியில் அனைத்து இடங்களிலும் சாலை, மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படைவசதிகள் செய்யப்பட்டு உள்ளன. ஆவடியில் உள்ள அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நிலையம், ஆபரேஷன் தியேட்டர், உள் நோயாளிகளுக்கு கூடுதலாக படுக்கை வசதி போன்றவை ஏற்பாடு செய்து உள்ளேன்.- எம்.எல்.ஏ. எஸ்.அப்துல் ரஹீம்

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

அ.தி.மு.க. 2 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

ஆவடியில் இதுவரை அனைத்து வசதிகளும் கொண்ட அரசு மருத்துவமனை இல்லை. அதை கொண்டு வர எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மழை காலங்களில் விளிஞ்சியம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகளில் புகுந்து விடுகிறது. இதை தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
விஜயகுமார் (ஆவடி)
குடிதண்ணீர், சாலை வசதி, தெரு விளக்கு போன்ற அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படவில்லை. சாலைகளில் ஆங்காங்கே தேங்கிக்கிடக்கும் குப்பை கழிவுகளால் துர்நாற்றம் வீசுகிறது.
ராதிகா அன்புச்செழியன் (திருநின்றவூர்)
க. பாண்டியராஜன்
jayapaul (avadi)
நாசர்
Adam (Avadi)

முக்கிய எதிர்பார்ப்புகள்

பட்டாபிராம் சி.டி.எச் சாலையில் சைடிங் செல்லும் ரெயில்வே கேட் அருகே மேம்பாலம் அமைக்க வேண்டும். ஆவடி பகுதியில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். திருநின்றவூர் பகுதியில் உள்ள ஏரி நிரம்பி குடியிருப்பு பகுதிகளில் நீர் புகாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆவடி பகுதியில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம், நீதிமன்றம், அரசு கல்லூரி, ஆகியவை கொண்டு வரவேண்டும். ஆவடி அரசு மருத்துவமனையை மேம்படுத்த வேண்டும். ஆவடி ரெயில் நிலையத்தில் தற்போது ஒரு சில எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மட்டும் நின்று செல்கின்றன. எனவே ஆவடி ரெயில் நிலையத்தை முக்கிய ரெயில் நிலையமாக மாற்றி அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆவடி ரெயில் நிலையத்தையொட்டி உள்ள ரெயில்வே கேட் எப்போதும் மூடியே கிடப்பதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். ஆபத்தான முறையில் ரெயில் தண்டவாளத்தை கடந்து செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர். எனவே அந்த பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும். திருநின்றவூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பஸ் நிலையம் அமைக்க வேண்டும். திருவேற்காடு பகுதியில் அரசு மருத்துவமனை அமைக்க வேண்டும். அங்குள்ள பிரசித்திபெற்ற தேவி கருமாரியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்பது போன்றவை இந்த தொகுதி மக்களின் பொதுவான கோரிக்கையாக உள்ளது.