தொகுதிகள்: செங்கம் (தனி)

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
திருவண்ணாமலை
வாக்காளர்கள்
:
249814
ஆண்
:
125011
பெண்
:
124801
திருநங்கை
:
2

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் செங்கம் (தனி) தொகுதி பழமையான தொகுதியாகும். செங்கம் தொகுதி செங்கம் மற்றும் புதுப்பாளையம் ஒன்றியத்தை கொண்டதாக இருந்தது. கடந்த 2011-ம் ஆண்டு...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

செங்கம் தொகுதியில் தேவையான இடங்களில் பெரிய அளவிலான பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டுள்ளது. அந்தனூர் மற்றும் ஆண்டிப்பட்டி அரசு மேல்நிலை பள்ளிகளில் தலா ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்தில் கழிவறைகள், அரட்டவாடி ஊராட்சியில் ரூ.49 லட்சத்தில் தார் சாலை, சென்னசமுத்திரம் ஊராட்சியில் ரூ.19 1/2 லட்சத்தில் தார் சாலைகள் உள்பட தொகுதி முழுவதும் தார்சாலை அமைக்கப்பட்டுள்ளது. மேல்செங்கம் பள்ளியில் ரூ.6 1/2 லட்சத்தில் அங்கன்வாடி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. செங்கம் பேரூராட்சியில் ரூ.12 லட்சத்தில் பயணிகள் நிழற்குடை, செய்யாற்றின் குறுக்கே ரூ.30 லட்சத்தில் தரைப்பாலம் என ரூ.2 கோடியில் 37 பணிகள் செய்யப்பட்டுள்ளது. 2013-ம் ஆண்டு பள்ளிகளுக்கு மேஜை, நாற்காலிகள், ஆழ்துளை கிணறுகள், அங்கன்வாடி கட்டிடம், மலைகிராமங்களில் தெருவிளக்குகள் என ரூ.1 கோடியே 82 லட்சத்தில் 69 பணிகள் செய்யப்பட்டுள்ளது. 2013-2014-ம் ஆண்டு சாலை வசதி, குடிநீர் வசதி, அங்கன்வாடி மையங்களுக்கு கியாஸ் இணைப்பு உள்பட 97 பணிகள் ரூ.2 கோடியில் செய்யப்பட்டுள்ளது.- எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த டி.சுரேஷ்குமார்

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

தி.மு.க. 4 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

அ.தி.மு.க. 4 முறை வென்றுள்ளது (2 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

ஜனதா கட்சி 1 முறை வென்றுள்ளது

காங்கிரஸ் 2 முறை வென்றுள்ளது

தே.மு.தி.க. 1 முறை வென்றுள்ளது

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

Need a train track from Tiruvannamalai to Jolarpettai.
Govardhanan (Chengam)

முக்கிய எதிர்பார்ப்புகள்

திருவண்ணாமலை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் செங்கத்தை அடுத்த மேல்செங்கத்தில் மத்திய, மாநில விவசாய பண்ணை சுமார் 11,300 ஏக்கரில் செயல்பட்டு வந்தது. ஒப்பந்த காலம் முடிந்தவுடன் விவசாய பண்ணை செயல்படாமல் நிறுத்தப்பட்டது. இதனால் இந்த பண்ணையில் வேலை பார்த்து வந்த 5 ஆயிரம் குடும்பங்கள் வேலையின்றி தவித்து வருகிறார்கள். செங்கம் சட்டமன்ற தொகுதியில் மகளிர் மேல் நிலைப்பள்ளி, நீதிமன்ற வளாகம், புதிய போக்குவரத்து பணிமனை என பல்வேறு முக்கிய பணிகள் நிறைவேற்றப்படாமல் அரைகுறையாக உள்ளது.