தொகுதிகள்: குமாரபாளையம்

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
நாமக்கல்
வாக்காளர்கள்
:
230973
ஆண்
:
113888
பெண்
:
117063
திருநங்கை
:
22

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2005-ம் ஆண்டுக்கு முன்பு நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, கபிலர்மலை, சேந்தமங்கலம், சங்ககிரி என 6 சட்டசபை தொகுதிகள் இருந்தன. கடந்த 2006-ம் ஆண்டு தொகுதி சீரமைப்பின்...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

குமாரபாளையத்தில் அரசு கலைக்கல்லூரி, பள்ளிபாளையத்தில் காவிரி ஆற்றுப்பாலம், சேஷசாயி காகித ஆலை குடியிருப்பு அருகில் ரெயில்வே மேம்பாலம், குமாரபாளையம் தாலுகா அறிவிப்பு, சாயப்பட்டறை கழிவுகளை தூய்மை படுத்திட பொது சுத்திகரிப்பு ஆலை திட்டம், சேஷசாயி காகித ஆலையில் இருந்து பள்ளிபாளையம் காவேரி ஆர்.எஸ். பகுதிக்கு வர ரெயில்வே கீழ்பாலம், பள்ளிபாளையம் நகராட்சிக்கு ரூ.11 கோடி செலவில் தனிக்குடிநீர் திட்டம், விவசாயிகளின் உற்பத்திக்கு தகுந்த விலை கிடைக்க நேரடி நெல் கொள்முதல் நிலையம், குமாரபாளையம் நகராட்சிப்பகுதியில் ரூ.123 கோடியில் பாதாள சாக்கடைத்திட்டம் அறிவிப்பு, பள்ளிபாளையத்தில் ரூ.65 லட்சம் செலவில் பஸ்நிலையம் என எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. இதுதவிர ரூ.20 கோடி செலவில் நகராட்சி சாலை, ரூ.10 கோடி செலவில் பேரூராட்சிக்கு சாலை வசதி, ரூ.50 கோடி செலவில் கிராம ஊராட்சிகளில் சாலை, குடிநீர் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு சிறப்பு நிதி பெற்று பணிகள் நடந்து முடிந்துள்ளன. குமாரபாளையத்தில் இருந்து சென்னை, பழனி, ஓமலூர் போன்ற பகுதிகளுக்கு நேரடியாக பஸ்கள் இயக்கப்படுகிறது. மேட்டூர் கால்வாயில் இருந்து பாசனத்திற்காகவும், குடிநீருக்காகவும் போதிய அளவு நீர் திறந்து விடப்பட்டு உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் தொகுதி மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. - அமைச்சர் பி.தங்கமணி

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

அ.தி.மு.க. 2 முறை வென்றுள்ளது (2 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

குமாரபாளையம் தொகுதி தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாகும். இவர்கள் தாங்கள் உழைக்கும் பணத்தை டாஸ்மாக் கடைகளில் செலுத்தி விடுவதால், பல குடும்பங்கள் திண்டாடி வருகின்றன. எனவே டாஸ்மாக் கடைகளை இழுத்து மூட வேண்டும்.
கவுசல்யா (சாணார்பாளையம்)
சாயக்கழிவு நீரால் இந்த தொகுதியில் நிலத்தடிநீர் மாசுபட்டு உள்ளது. இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
எஸ்.சுப்பிரமணியன் (குமாரபாளையம்)

முக்கிய எதிர்பார்ப்புகள்

குறைந்த அளவு நிலத்தடிநீர். சாய பூங்கா அமைக்க வேண்டும்.