தொகுதிகள்: திருப்போரூர்

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
காஞ்சிபுரம்
வாக்காளர்கள்
:
254300
ஆண்
:
125749
பெண்
:
128533
திருநங்கை
:
18

காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள திருப்போரூர் சட்டமன்ற தொகுதி திருப்போரூர் மற்றும் காட்டாங்கொளத்தூர் ஒன்றியங்களை உள்ளடக்கி இருந்தது. கடந்த 2011-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின்போது காட்டாங்கொளத்தூர்...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

திருப்போரூர் தொகுதி மக்களின் பல ஆண்டு கோரிக்கையான திருப்போரூர் தனி தாலுகா அமைக்கப்பட்டது. புதிய தாலுகா அலுவலக கட்டிடம் ரூ.2 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு ரூ.2 1/2 கோடி மதிப்பில் புதிய கட்டிடம் கட்டி திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு ரூ.9 கோடி செலவில் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்டு நிதி பற்றாக்குறையால் பாதியில் நின்ற பாலத்திற்கும், திருப்போரூர்- நெம்மேலி இணைப்பு சாலைக்கும் கூடுதலாக ரூ.9 கோடி நிதி ஒதுக்கி மேம்பால சாலை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. கேளம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையம் ரூ.1 கோடி செலவில் 30 படுக்கையுடன் கூடிய தாலுகா ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அதே போன்று சட்ராஸ் ஆஸ்பத்திரி ரூ.1 கோடி செலவில் 30 படுக்கைகள் கொண்ட ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. திருப்போரூர் ஒன்றியம் தண்டரை கிராமத்தில் தொழில் வளத்தை பெருக்கும் வகையில் 48 1/2 ஏக்கர் நிலப்பரப்பில் சிட்கோ தொழிற்பேட்டை அமைக்கப்பட உள்ளது.- எம்.எல்.ஏ. தண்டரை மனோகரன்

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

தி.மு.க. 6 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

அ.தி.மு.க. 5 முறை வென்றுள்ளது (2 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

பா.ம.க. 1 முறை வென்றுள்ளது

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

எங்கள் பகுதியில் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு புறம்போக்கு நிலத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும்.
விஜயா (பட்டிபுலம் கிராமம்)
திருப்போரூரில் முக்கிய சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீரை தடுக்க வேண்டும். திருப்போரூர் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும்.
தி.க.கதிர்வேல் (திருப்போரூர்)
Rectify Thiruporur - Nemmeli road and take necessary actions to prevent sewage water flow on the road.
T.K.Kathirvel (Thiruporur)

முக்கிய எதிர்பார்ப்புகள்

திருப்போரூர் பேரூராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த வேண்டும். திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில் தட்டுப்பாடின்றி குடிநீர் வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.