தொகுதிகள்: விருகம்பாக்கம்

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
சென்னை
வாக்காளர்கள்
:
292248
ஆண்
:
146849
பெண்
:
145319
திருநங்கை
:
80

கடந்த 2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது தொகுதி மறுசீரமைப்பில் ஆலந்தூர், வில்லிவாக்கம், மதுரவாயல் தொகுதிகளில் இருந்து விருகம் பாக்கம் தொகுதி புதிதாக உதயமானது. ஆசியாவிலேயே 2-வது பெரிய...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

எம்.ஜி.ஆர். நகர் வ.உ.சி. தெருவில் ரூ.14 லட்சத்திலும், அன்னை சத்யா தெரு, பாலைத்தெரு, அண்ணா மெயின் ரோடு ஆகிய இடங்களில் தலா ரூ.17 லட்சத்தில் அங்கன்வாடி கட்டிடம், ரூ.17 லட்சத்தில் சிவலிங்கபுரம் பல்நோக்கு கட்டிடம் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. ரூ.35 லட்சத்தில் கழிவுநீர் அகற்றும் புதிய ஜெட்ராடிங் லாரி, ஜெயகோபால் கரோடியா மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.2 கோடியில் புதிய அடுக்குமாடி வகுப்பறை கட்டிடங்கள், எம்.ஜி.ஆர்.நகர் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் சென்னை மாநகராட்சி பள்ளியில் ரூ.1 கோடியே 50 லட்சம் செலவில் மேஜை, நாற்காலி உள்பட தளவாட பொருட்களை வாங்கி கொடுக்கப்பட்டுள்ளது. கே.கே.நகர் அரசு மருத்துவமனைக்கு புதிய கட்டிடம் மற்றும் நவீன கழிப்பறைகள், ஆர்.ஓ.பிளான்ட் குடிநீர் வசதிக்காக ரூ.3 கோடியே 30 லட்சம் ஒதுக்கி தரப்பட்டுள்ளது. - பார்த்தசாரதி எம்.எல்.ஏ.

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

தே.மு.தி.க. 1 முறை வென்றுள்ளது

அ.தி.மு.க. 1 முறை வென்றுள்ளது

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

விருகம்பாக்கம் தொகுதியில் ரேஷன் கடைகளில் தரமான பொருட்கள் கிடைப்பது இல்லை. இதனால் வெளிசந்தையில் கூடுதல் விலை கொடுத்து பருப்பு வகைகளை வாங்க வேண்டிய நிலை உள்ளது. இது எங்களை போன்ற ஏழை-எளிய மக்களுக்கு கஷ்டமாக உள்ளது.
வேட்டம்மாள் (விருகம்பாக்கம்)
நெசப்பாக்கம், எம்.ஜி.ஆர்.நகரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாண எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சாலை வசதிகளும் முறையாக இல்லை.
ரகு (நெசப்பாக்கம்)
Take steps to solve the traffic congestion at Nesapakkam M.G.R Nagar.
Raghu (Nesapakkam)

முக்கிய எதிர்பார்ப்புகள்

தொகுதியின் பிரதான பிரச்சினையாக பட்டா பிரச்சினை பார்க்கப்படுகிறது. போக்குவரத்து நெரிசல் தொடர்கதையாக இருப்பது.