தொகுதிகள்: ஆம்பூர்

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
வேலூர்
வாக்காளர்கள்
:
212246
ஆண்
:
104197
பெண்
:
108048
திருநங்கை
:
1

தோல் பொருட்கள், ஷூ உற்பத்தி, ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் நகரமாக ஆம்பூர் உள்ளது. தோல் பொருட்கள் ஏற்றுமதியில் அன்னிய செலாவணியை ஈட்டி தரும் நகரம் என்பதால் ஆம்பூருக்கு ஏற்றுமதி சிறப்பு நகரம் என்ற...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

ஆம்பூர் பெத்லேகம் ரெயில்வே மேம்பாலம் கட்ட ரூ.30 கோடி பெற்று தந்தது. ஆம்பூரில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் அமைத்தது. ரூ.2 கோடியில் புதிய தாலுகா அலுவலக கட்டிடம் கட்டியது. மின்னூர், வெங்கடசமுத்திரம் ஊராட்சியில் புதியதாக ஆரம்ப சுகாதார நிலையம் கொண்டு வந்தது. ஆம்பூர் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு ரூ.55 லட்சத்தில் புதிய கட்டிடம். தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10 கோடிக்கு குடிநீர், ரேஷன்கடை, நூலகம், அங்கன்வாடி கட்டிடம், சாலை வசதி, மருத்துவமனை கட்டிடம், மாணவர்களுக்கு இருக்கைகள் செய்து கொடுத்தது. ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியை தாலுகா ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்தியது. ஆலங்காயம் ஒன்றியம் மேலகுப்பம் - இளையநகரம் ஊராட்சிகளை இணைக்கும் தரைப்பாலம் அமைத்தது. மின்னூர், மலையாம்பட்டு, கொல்லமங்கலம் ஏரிகளை ரூ.1.65 கோடியில் தூர்வாரி, சுத்தப்படுத்தியது, நாயக்கனேரி மலைப்பகுதிக்கு மலைவாழ் மக்கள் நல்வாழ்வு திட்டத்தின் கீழ் சாலை அமைத்தல், தொகுதி முழுவதும் ரூ.27 கோடிக்கு தார்சாலை அமைத்து, மண்டல நூலகம் கட்டுவற்கு ரூ.2 கோடி நிதி வாங்கி கொடுத்தது, நகரில் சிறுபான்மையினர் நலவிடுதி அமைத்தது ஆகிய பணிகள் செய்யப்பட்டுள்ளது. - எம்.எல்.ஏ. அஸ்லம்பாஷா

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

தி.மு.க. 2 முறை வென்றுள்ளது

மனிதநேய மக்கள் கட்சி 1 முறை வென்றுள்ளது

அ.தி.மு.க. 1 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

Need barricades across Uthira Cauvery river to prevent flood damages during rainy season.
Vijayalakshmi (Agaramcheri)

முக்கிய எதிர்பார்ப்புகள்

ஆம்பூர் நகராட்சி பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி எதுவும் இல்லை. எனவே, ஏ.கஸ்பா பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும். ஆம்பூர் அருகே மின்னூர் என்ற இடத்தில் டான்சி தோல் தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது. அதனை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழில் நகரம் என்பதால் வெளிநாட்டினரும், அண்டை மாநிலத்தவரும் அடிக்கடி ஆம்பூர் வருகின்றனர். ஆம்பூரில் ஒரு சில ரெயில்களை தவிர எந்த ரெயில்களும் நிற்பது கிடையாது. எனவே, அனைத்து ரெயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.