தொகுதிகள்: அவினாசி (தனி)

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
திருப்பூர்
வாக்காளர்கள்
:
248719
ஆண்
:
123172
பெண்
:
125529
திருநங்கை
:
18

கோவை மாவட்டத்தில் இருந்த அவினாசி சட்டமன்ற தொகுதி கடந்த 1957-ம் ஆண்டு உருவாக்கப்பட்டு தேர்தலை சந்தித்து வருகிறது. ஆதிதிராவிடர் இன மக்கள் இந்த தொகுதியில் அதிகம் இருந்ததால் கடந்த 1977-ம் ஆண்டு அவினாசி...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

அவினாசி அரசு ஆஸ்பத்திரியில் 30 படுக்கை வசதிகளுடன் தரம் உயர்த்தப்பட்டு பிரேத பரிசோதனை அறை அமைக்கப்பட்டுள்ளது. அன்னூர், மூக்கனூர், பொகளூர் ஆகிய இடங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்களை தரம் உயர்த்தி 30 படுக்கை வசதிகளுடன் கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. அவினாசி மற்றும் அன்னூர் தாலுகாவில் தீயணைப்பு நிலையத்தை புதிதாக அமைக்க சட்டசபையில் முதல்&அமைச்சர் ஜெயலலிதா அறிவித்ததுடன், அவற்றை சமீபத்தில் அமைத்தும் திறந்து வைத்துள்ளார். அவினாசியில் புதிதாக சார்பு நீதிமன்றமும் அமைக்கப்பட்டுள்ளது. சேயூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 36 வகுப்பறைகளுடன் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளதுடன், சேயூரில் ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு தங்கும் விடுதி கட்டப்பட்டுள்ளது. அம்மாபாளையத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் பல்வேறு அரசு பள்ளிகளுக்கு எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பல லட்சம் ரூபாய் மதிப்பில் சுற்றுச்சுவர் கட்டிக்கொடுப்பட்டுள்ளது. இதுதவிர ரேஷன் கடை கட்டிடம், நிழற்குடை, அங்கன்வாடி கட்டிடம், தார்சாலை பணிகள், குடிநீர் திட்ட பணிகள் போன்றவையும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.- எம்.எல்.ஏ. கருப்பசாமி

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

சுதந்திரா கட்சி 1 முறை வென்றுள்ளது

சுயேட்சை 1 முறை வென்றுள்ளது

காங்கிரஸ் 1 முறை வென்றுள்ளது

சி.பி.ஐ. 1 முறை வென்றுள்ளது

அ.தி.மு.க. 6 முறை வென்றுள்ளது (5 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

அ.தி.மு.க. (ஜெ) 1 முறை வென்றுள்ளது

தி.மு.க. 1 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

There are twenty one village unions in Avinashi and water scarcity is a big problem here.
Jamuna Rani (Kembanayakanpalayam)

முக்கிய எதிர்பார்ப்புகள்

அன்னூர் ஊராட்சி ஒன்றியத்தில் 21 கிராம ஊராட்சிகள் உள்ளன. இங்கு குடிநீர் தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. திருப்பூர் 2-வது கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் தனியாக பிரிக்கப்பட்டு அன்னூர் ஒன்றியத்தில் உள்ள 9 ஊராட்சிகளுக்கு தனி குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்யும் திட்டம் நிதி ஒதுக்காத காரணத்தால் இதுவரை தொடங்கவில்லை. தற்போது கூட்டு குடிநீர் திட்டத்தில் 10 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. இதை தீர்க்க வேண்டும். இந்த பகுதி செழிக்க வேண்டுமானால் அவினாசி-அத்திக்கடவு திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.