திருப்பூர் மாவட்டத்தில் இடம் பெற்றுள்ள தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் ஆதிதிராவிட மக்கள் அதிகம் இருப்பதால் கடந்த 1967-ம் ஆண்டு தனித்தொகுதியாக அறிவிக்கப்பட்டது. அதுமுதல் 49 ஆண்டுகளாக தனித் தொகுதியாகவே...
குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க அமராவதி குடிநீர் அபிவிருத்தி திட்டம் ரூ.14 கோடியே 74 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அமராவதி ஆற்றின் குறுக்கே 4 இடங்களில் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளது. காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் கிடைக்கும் தண்ணீரை, கிராமங்களுக்கு கொண்டு செல்ல சுமார் ரூ.10 கோடி செலவில் பல இடங்களில் நீர் உந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. பொட்டிக்காம்பாளையம், தாசர்பட்டி, அலங்கியம் ஆகிய கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. தார்ச்சாலைகள், காங்கிரீட் சாலைகள், சூரிய ஒளி விளக்குகள் மற்றும் எல்.இ.டி. விளக்குகள், பயணிகள் நிழற்குடைகள், ரேஷன் கடைகளுக்கு கட்டிடங்கள், சமுதாயக்கூடம், திடக்கழிவு மேலாண்மை போன்ற திட்டங்கள் இந்த தொகுதியில் செயல்படுத்தப்பட்டுள்ளது.- எம்.எல்.ஏ. பொன்னுசாமி
தி.மு.க. 5 முறை வென்றுள்ளது (2 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)
அ.தி.மு.க. 5 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)
பா.ம.க. 1 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)
காங்கிரஸ் 1 முறை வென்றுள்ளது
ஈரோடு- தாராபுரம்- பழனி ரெயில் பாதை திட்டம், முருங்கை பவுடர் தொழிற்சாலை, அரசு கல்லூரி அமைக்க வேண்டும் போன்றவை இந்த பகுதி மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.