தொகுதிகள்: துறைமுகம்

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
சென்னை
வாக்காளர்கள்
:
188171
ஆண்
:
98718
பெண்
:
89392
திருநங்கை
:
61

சென்னையில் உள்ள முக்கிய பகுதிகளை கொண்ட தொகுதியாக துறைமுகம் தொகுதி விளங்குகிறது. இந்த தொகுதியில்தான் சென்னை துறைமுகம், பாரிமுனை, உயர்நீதிமன்றம், அரசு சட்டக் கல்லூரி, தலைமைச்செயலகம், சென்டிரல்,...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

அ.தி.மு.க. வேட்பாளராக துறைமுகம் தொகுதியில் போட்டியிட்ட நான், மக்களை சந்தித்து ஓட்டு கேட்டபோதே, அங்கப்ப நாயக்கன் தெருவில் உள்ள உருது பள்ளி விளையாட்டு மைதானம் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதை மீட்டு தருவேன் என்று வாக்குறுதி அளித்திருந்தேன். ஆனால், அந்த வாக்குறுதியை நிறைவேற்றவிடாமல் அ.தி.மு.க.வினரே தடுத்தனர். எனது தொகுதி நிதியில் இருந்து பல இடங்களில் கழிப்பிடங்கள் கட்ட நிதி ஒதுக்கி, அதற்கு மாநகராட்சி இடத்தையும் தேர்வு செய்து கொடுத்தேன். ஆனால், 1 1/2 ஆண்டுகளுக்கு பிறகு நான் அளித்த தொகை திரும்பி வந்தது. காரணம் கேட்டால், நான் கழிப்பிடம் கட்ட தேர்வு செய்து அளித்த இடம் மாநகராட்சிக்கு சொந்தம் கிடையாது என்கிறார்கள். அப்படி என்றால், அது யாருடைய இடம் என்று கேட்டால் பதில் இல்லை.- எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த பழ.கருப்பையா

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

சுயேட்சை 2 முறை வென்றுள்ளது

தி.மு.க. 8 முறை வென்றுள்ளது (2 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

ம.தி.மு.க. 1 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

அ.தி.மு.க. 1 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளில் முறையான கழிப்பிட வசதி செய்து தரவேண்டும்.
பிரபு (மண்ணடி)
மண்ணடியில் போக்குவரத்து நெரிசல் என்பது எப்போதும் இருக்கிறது. அதை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
மாணிக்கம் (மண்ணடி)

முக்கிய எதிர்பார்ப்புகள்

துறைமுகம் தொகுதியில்தான் பாரிமுனையில் உள்ள பர்மா பஜார் வருகிறது. இதில், 300 கடைகள் இருந்தாலும், அதில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு கழிப்பிட வசதி இல்லை. இதேபோல், தொழிலாளர்கள் வசிக்கும் பகுதியிலும் முறையான கழிப்பிட வசதி செய்து தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது.