தொகுதிகள்: ஓசூர்

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
கிருஷ்ணகிரி
வாக்காளர்கள்
:
302409
ஆண்
:
156436
பெண்
:
145884
திருநங்கை
:
89

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் தொகுதி கடந்த 1951-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் சேலம் ஜில்லாவின் தலைநகராக திகழ்ந்த பெருமையுடையது ஓசூர் நகராகும். ஆசியாவிலேயே மிகப் பெரிய...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

தொகுதி மேம்பாட்டு நிதி முழுவதையும் தொகுதியின் வளர்ச்சிப்பணிகளுக்கு செலவிட்டுள்ளேன். எனது பதவி காலத்தில் இந்த தொகுதியில் பஸ் நிலையம் கொண்டு வர நடவடிக்கை எடுத்தேன். உயர்மட்ட மேம்பாலங்கள், சாலை விரிவாக்க பணிகள் ஆகிய பணிகள் நடந்துள்ளன. நகராட்சி பகுதியில் ஏற்கனவே இருந்த வரியை 50 சதவீதமாக குறைக்க நடவடிக்கை எடுத்தேன். போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதிகளில் உள்வட்டச்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டம் ஓசூர் சிப்காட் பகுதியில் இல்லாமல் இருந்தது. அந்த திட்டத்தை இந்த பகுதியில் சேர்த்திட நான் முயற்சிகள் மேற்கொண்டேன். பாகலூர் அருகே மாலூர் செல்லும் சாலையில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் கொண்டு வர நடவடிக்கை எடுத்தேன். தொரப்பள்ளியில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் கட்டிட நடவடிக்கை எடுத்தேன். இந்த தொகுதியில் ஓசூர் அரசு கலைக்கல்லூரி கொண்டு வர நடவடிக்கை எடுத்தேன். ஓசூர் தொகுதியில் சிறுபான்மை மொழி பேசக்கூடிய மக்கள் அதிகம் வசிக்கிறார்கள். சிறுபான்மை மொழி பேசக்கூடிய மாணவர்கள் அவர்கள் பேசக்கூடிய மொழிகளிலேயே படிக்க, எழுத அனுமதிக்க வேண்டும் என்று சட்டசபையில் தொடர்ந்து வலியுறுத்தினேன். நான் பதவியில் இருந்த 15 ஆண்டுகாலத்தில் ஓசூர் சட்டமன்ற தொகுதியின் வளர்ச்சிக்காக பல்வேறு பணிகளை நிறைவேற்றி உள்ளேன். - எம்.எல்.ஏ. கோபிநாத்

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

சுதந்திரா கட்சி 2 முறை வென்றுள்ளது

காங்கிரஸ் 8 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

ஜனதா தளம் 1 முறை வென்றுள்ளது

அ.தி.மு.க. 1 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

Set up a cold storage house.
Arumugam (Hosur)
தென்கனிகோட்டை ரோடு, தளி ரோடு அகலப்படுத்துதல்
சேஷாத்ரி (ஓசூர்)

முக்கிய எதிர்பார்ப்புகள்

காய்கறிகள், பழங்களை வைக்க குளிர்பதன கிடங்கு வேண்டும். போக்குவரத்து நெரிசல். பழுதடைந்த சாலைகள்.