தொகுதிகள்: ஜோலார்பேட்டை

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
வேலூர்
வாக்காளர்கள்
:
223303
ஆண்
:
111201
பெண்
:
112101
திருநங்கை
:
1

கடந்த 2011-ம் ஆண்டுக்கு முன்பு வரை ஜோலார்பேட்டை திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியுடன் இணைக்கப்பட்டு இருந்தது. தொகுதி சீரமைப்பின் போது நாட்டறம்பள்ளி சட்டமன்ற தொகுதி நீக்கப்பட்டு 2011-ம் ஆண்டு முதல்...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

தாமலேரிமுத்தூர், சின்னமோட்டூர் ஆகிய பகுதிகளில் புதியதாக ஆரம்ப சுகாதார நிலையம், அக்ராவரம் பகுதியில் ரூ.33 கோடியே 40 லட்சம் செலவில் புதியதாக அரசு தொழில்நுட்ப கல்லூரி திறக்கப்பட்டது. 100 படுக்கை வசதியுடன் நாட்டறம்பள்ளி அரசு ஆஸ்பத்திரி தரம் உயர்த்தப்பட்டது. பச்சூர், ஜோலார்பேட்டை ஆரம்ப சுகாதார நிலைய ஆஸ்பத்திரி 30 படுக்கை வசதியுடன் தரம் உயர்த்தப்பட்டது. 12 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. 5 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டது. 12 பள்ளிகளுக்கு சொந்த செலவில் கலையரங்கம் கட்டி கொடுத்தல், நாட்டறம்பள்ளி தாலுகா அலுவலக கட்டிடம் திறப்பு, ரூ.75 லட்சம் செலவில் ஜோலார்பேட்டை நகராட்சி கட்டிடம், ரூ.1 1/2 கோடி செலவில் 30 படுக்கை வசதியுடன் கூடிய அறுவை சிகிச்சை அரங்கம் திறக்கப்பட்டது. நாட்டறம்பள்ளி பேரூராட்சி புதிய அலுவலகம் திறக்கப்பட்டது. ஜோலார்பேட்டையில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் ரூ.20 லட்சம் செலவில் உடற்பயிற்சி உபகரணங்கள், காவிரி கூட்டு குடிநீர் கொண்டு வரப்பட்டது. ஆழ்துளை கிணறு, சிமெண்டு சாலைகள், ரேஷன் கடைகள், சமுதாய கூடங்கள் என பல்வேறு நலத்திட்டங்கள் தொகுதி முழுவதும் செய்யப்பட்டுள்ளது. - பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

அ.தி.மு.க. 2 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

Put tar or cement road at Santhaikodiyur police station road.
Muthamizhselvi (Jolarpet)

முக்கிய எதிர்பார்ப்புகள்

ஏலகிரிமலையை சுற்றுலாதலமாக அறிவித்தும், எந்தவித பணிகளையும் மேற்கொள்ளவில்லை. ஜோலார்பேட்டை சந்திப்பு (ஜங்ஷன்) பஸ் நிறுத்தத்தில் பஸ் நிலையம் அமைத்து தருவதாக கூறியும் அதற்கான முயற்சிகள் எதுவும் எடுக்கவில்லை.