தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடிக்கு அடுத்தபடியாக 2-வது பெரிய நகரமாக கோவில்பட்டி விளங்குகிறது. தீப்பெட்டி தொழிற்சாலைகள், நூற்பாலைகள் அதிகம் உள்ளன. கோவில்பட்டி சட்டசபை தொகுதியில் கரிசல்...
கோவில்பட்டி அரசு கலை அறிவியல் கல்லூரிக்கு ரூ.7 3/4 கோடி செலவில் சொந்த கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. அதன் அருகில் ரூ.7 கோடி செலவில் சர்வதேச தரம் வாய்ந்த ஆக்கி மைதானம் அமைக்கப்பட்டு உள்ளது. கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டு, சி.டி.ஸ்கேன், டிஜிட்டல் எக்ஸ்ரே, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், டயாலிசிஸ் மையம் தொடங்கப்பட்டு உள்ளன. கூட்ட அரங்கு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியும் அமைக்கப்பட்டு உள்ளன. 32 கிராமங்களில் தலா ரூ.6 லட்சம் செலவில் அங்கன்வாடி கட்டிடங்கள், 19 கிராமங்களில் தலா ரூ.8 லட்சம் செலவில் ரேஷன் கடைகள் கட்டப்பட்டு உள்ளன. 23 கிராமங்களில் பகுதி நேர ரேஷன் கடைகள் தொடங்கப்பட்டு உள்ளன.- எம்.ல்.ஏ. கடம்பூர் ராஜூ
சி.பி.ஐ. 7 முறை வென்றுள்ளது
காங்கிரஸ் 1 முறை வென்றுள்ளது
அ.தி.மு.க. 4 முறை வென்றுள்ளது (3 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)
கோவில்பட்டியில் 2-வது பைப்- லைன் குடிநீர் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும், சாலை வசதியை மேம்படுத்த வேண்டும், போலீஸ் நிலையங்களில் கூடுதல் போலீசார் நியமிக்க வேண்டும், கண்மாய்கள், குளங்களை தூர்வார வேண்டும், வேலிக்கருவேல மரங்களை அகற்றி, நீர் ஆதாரங்களை பெருக்க வேண்டும் என்பதும் தொகுதி மக்களின் முக்கிய கோரிக்கைகள் ஆகும்.