தொகுதிகள்: குளித்தலை

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
கரூர்
வாக்காளர்கள்
:
208831
ஆண்
:
102914
பெண்
:
105915
திருநங்கை
:
2

கரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் கரூரை அடுத்து 2-வது முக்கிய இடத்தில் உள்ளதும், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது குளித்தலை தொகுதியாகும். குளிர்தண்டலை என்று பலராலும்...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

குளித்தலை அடுத்த மணத்தட்டையில் ரூ. 1 கோடியே 25 லட்சத்தில் போக்குவரத்து பணிமனை அமைக்கப்பட்டுள்ளது. நங்கம் காட்டுவாரியில் ரூ. 2 கோடியில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. குமாரமங்கலம் பகுதியில் ரூ. 75 லட்சத்தில் புதிய பாலம், ரூ. 2 கோடியில் நச்சலூர்- புரசம்பட்டி வாரிப்பாலம், வயலூரில் ரூ. 2 கோடியில் வாரிப்பாலம், சீகம்பட்டி புதுப்பட்டியில் ரூ. 2 கோடியே 25 லட்சத்தில் தடுப்பணை, 10 ஊர்களில் ரூ. 2 கோடியே 25 லட்சத்தில் கால்நடை மருத்துவமனைகள், இனுங்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் குளித்தலை அரசு மருத்துவமனையில் ரூ. 1 கோடியே 75 லட்சத்தில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. பள்ளிகளுக்கு ரூ. 9 கோடியில் புதிய கட்டிடங்கள். இனுங்கூர் விவசாய பண்ணையில் ரூ. 46 லட்சத்தில் புதிய கட்டிடம் ரூ. 65 லட்சத்தில் தோகைமலை பஸ்நிலைய விரிவாக்க பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. - சட்டமன்ற உறுப்பினர் அ.பாப்பாசுந்தரம்

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

தி.மு.க. 5 முறை வென்றுள்ளது

காங்கிரஸ் 1 முறை வென்றுள்ளது

சி.பி.ஐ. 1 முறை வென்றுள்ளது

அ.தி.மு.க. 4 முறை வென்றுள்ளது (3 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

அ.தி.மு.க. (ஜெ) 1 முறை வென்றுள்ளது

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

A new bus stand should be set with all facilities to prevent the traffic congestion.
R. C. Mamundiya Pillai (Kulithalai)
ஒரு தடவையாவது வேட்பாளர்கள் நேரடியாக ஒட்டு கேக்க வரவேண்டும்.நான் என் தொகுதி MLA வை பார்த்ததில்லை.
siva (ganesapuram)
கணேசபுரம் முதல் ஊராளிப்பள்ளம் வழியாக பங்களாபுதூர் தார் சாலை மற்றும் ஊராளிப்பள்ளத்தில் தடுப்பு சுவர் கட்ட வேண்டும். இது அவ்வூர் மக்களால் கேட்டுகொள்ளபடுகிற கோரிக்கை.
சிவா கணேசன் (ஊராளிப்பள்ளம், கணேசபுரம்.)

முக்கிய எதிர்பார்ப்புகள்

குளித்தலை நகரப்பகுதியில் உள்ள கடைகள், வீடுகள், மருத்துவமனைகள், தனியார் நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் இங்கு அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் சாக்கடை வழியாகச் சென்று வாய்க்காலிலும், விவசாய நிலங்கள் உள்ள பகுதியிலும் சென்று கலக்கிறது. இந்த அவலநிலையை போக்க பாதாள சாக்கடை திட்டம் கொண்டுவரவோ அல்லது கழிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கவோ நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். இப்பகுதியில வாழை அதிக அளவில் விளைவிக்கப்படுவதால், இங்கு வாழை பழத்தைக்கொண்டு பல்வேறு உணவு பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலை தொடங்கப்படவேண்டும் என்பது இப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.