2011-ல் தொகுதி சீரமைப்புக்குபின் கடலாடி தொகுதி நீக்கப்பட்டு அதன் பெரும் பகுதி முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியுடனும், ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியுடனும் இணைக்கப்பட்டுள்ளன. தற்போது இந்த தொகுதியில்...
தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.10 கோடியே 26 லட்சத்து 72 ஆயிரம் செலவில் 320 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் 15 அங்கன்வாடி மையங்களுக்கு புதிய கட்டிடங்களும், 31 பயணியர் நிழற்குடைகளும், 19 கலையரங்கங்களும், ரேஷன்கடை கட்டிடம், நூலக கட்டிடம், வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் 25 பேருக்கு வீடுகள், பேரையூர் மற்றும் கீரனூரில் கால்நடை மருந்தக கட்டிடம், முதுகுளத்தூர் மற்றும் கடலாடியில் அரசு கலைக்கல்லூரிகள் ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளன. கமுதி கோட்டைமேடு அரசு உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. எஸ். தரைக்குடி, செல்வநாயகபுரம், கோவிலாங்குளம், காக்கூர், அலங்கானூர் ஆகிய ஊர்களில் அரசு உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளன. கோட்டைமேடு பள்ளி தரம் உயர்த்தப்பட்டு ரூ.30 லட்சம் செலவில் சுற்றுச்சுவர் மற்றும் ரூ.40 லட்சம் செலவில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. 18 பள்ளிகளுக்கு குடிநீர் சுத்திகரிப்பு எந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. - சட்டமன்ற உறுப்பினர் முருகன்
சுதந்திரா கட்சி 1 முறை வென்றுள்ளது
சுயேட்சை 3 முறை வென்றுள்ளது
காங்கிரஸ் 3 முறை வென்றுள்ளது
தி.மு.க. 2 முறை வென்றுள்ளது
த.மா.கா எம் 1 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)
அ.தி.மு.க. 2 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)
முதுகுளத்தூர் தொகுதியில் தொழிற்சாலைகள் எதுவும் இல்லை. மேலும் இந்தபகுதியில் என்ஜினீயரிங் உள்ளிட்ட தொழில்நுட்ப கல்லூரிகள் இல்லாததால் மாணவர்களின் உயர்கல்வி பிரகாசமாக இல்லை.