தொகுதிகள்: நாகர்கோவில்

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
கன்னியாகுமரி
வாக்காளர்கள்
:
263449
ஆண்
:
130088
பெண்
:
133346
திருநங்கை
:
15

தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளில் பெயரை சொன்னவுடன் நினைவுக்கு வரும் தொகுதிகளில் நாகர்கோவிலும் ஒன்று. படித்தவர்கள் நிறைந்த மாவட்டம் என்று சொல்லக்கூடிய குமரி மாவட்டத்தின் தலைநகரையே தலைமையிடமாகக் ...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

கோணத்தில் ரூ.1 1/2 கோடி மதிப்பில் உள் விளையாட்டு அரங்கம் அமைக்கப்படுகிறது. புத்தேரி ரெயில்வே மேம்பாலத்துக்குகூட ரூ.12 கோடி நிதியை அ.தி.மு.க. அரசு ஒதுக்கியிருக்கிறது. மார்ஷல் நேசமணிக்கு ரூ.48 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் மணிமண்டபம் கட்டப்பட்டது. கலெக்டர் அலுவலகத்தில் கடந்த ஆட்சியின்போது கட்டிடங்கள் போதுமானதாக இல்லை. இந்த ஆட்சியில் ரூ.17 கோடி மதிப்பில் கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டு இருக்கிறது. அது மட்டும் அல்ல, நாகர்கோவில் கோர்ட்டு வளாகத்தில் ஒருங்கிணைந்த கட்டிடம் சுமார் ரூ.14 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. - எம்.எல்.ஏ. நாஞ்சில் ஏ.முருகேசன்

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

தி.மு.க. 4 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

நிறுவன காங்கிரஸ் 1 முறை வென்றுள்ளது

அ.தி.மு.க. 3 முறை வென்றுள்ளது

காங்கிரஸ் 2 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

த.மா.கா எம் 1 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

எம்.ஜி.ஆர். அ.தி.மு.க. 1 முறை வென்றுள்ளது

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

Instead of free schemes, government should plan for long-term beneficiary projects.
Sriram, Consumer Protection Association President. (Nagercoil)
போக்குவரத்து நெரிசல் குறைக்க பட வேண்டும்
ஆரத்திக் ராஜ் (நாகர்கோவில்)

முக்கிய எதிர்பார்ப்புகள்

நாகர்கோவில் நகரசபைக்கு உட்பட்ட வலம்புரிவிளை குப்பைக்கிடங்கு அதன் சுற்றுப்புற பகுதி மக்களுக்கு பெரும் இடையூறாக உள்ளதாக குற்றம்சாட்டினர். இந்த குப்பைக்கிடங்கில் அடிக்கடி தீ பற்றுவதால் சுற்றுப்பகுதி மக்கள் புகையால் பாதிக்கப்படுகிறார்கள். மேலும், குப்பைக்கூளங்களில் இருந்து வெளியேறும் விஷ ஜந்துகள் அக்கம்பக்கத்து வீடுகளுக்குள் புகுந்து விடுகின்றன. இது தவிர குப்பைக்கிடங்கால் எழும் துர்நாற்றமும் சகிக்க முடியாததாக உள்ளது. எனவே, இந்த குப்பைக்கிடங்கை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். குடிநீர் திட்டப்பணிகள் வேலைவாய்ப்பை உருவாக்க தொழிற்சாலைகளை நாகர்கோவில் தொகுதியில் தொடங்க வேண்டும்