தொகுதிகள்: ஒட்டன்சத்திரம்

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
திண்டுக்கல்
வாக்காளர்கள்
:
223014
ஆண்
:
110367
பெண்
:
112641
திருநங்கை
:
6

தமிழகத்தில் மிகப்பெரிய காய்கறி மார்க்கெட்டை தன்னகத்தே கொண்டதாக ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி திகழ்கிறது. ஒட்டன்சத்திரம் நகராட்சி, தொப்பம்பட்டி, ஒட்டன்சத்திரம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்கள், கீரனூர்...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

ஒட்டன்சத்திரம் நகராட்சி, ஒன்றியத்தில் வசிக்கிற மக்கள் பயன்பெறும் வகையில் தொடங்கப்பட்ட காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட பணிகள் தி.மு.க. ஆட்சி காலத்தில் 80 சதவீதம் முடிந்துவிட்டன. ஆனால் மீதமுள்ள 20 சதவீத பணிகளை, கடந்த 5 ஆண்டுகளாக முடிக்காமல் கிடப்பில் போட்டுவிட்டனர். தி.மு.க. ஆட்சியில் 90 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில் உள்ள நல்லதங்காள் அணை திட்ட பணியையும் முடிக்கவில்லை. 150 ஏக்கர் பரப்பளவில் இடையக்கோட்டையில் தொழிற்பேட்டை அமைக்கும் பணி நிறைவேற்றவில்லை. ஒட்டன்சத்திரம், சத்திரப்பட்டி புறவழிச்சாலை அமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. - அர.சக்கரபாணி எம்.எல்.ஏ.

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

தி.மு.க. 8 முறை வென்றுள்ளது (2 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

காங்கிரஸ் 1 முறை வென்றுள்ளது

அ.தி.மு.க. 3 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

பல்வேறு இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. சாலைகள் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. சுகாதாரம் கேள்விக்குறியாக இருக்கிறது.
பூபதி (ராயகவுண்டன் புதூர்)
ஒட்டன்சத்திரம் தொகுதியில் விவசாயத்தை மேம்படுத்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும். படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்க வேண்டும். மருத்துவ கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சீரப்பன் (காவேரியம்மாபட்டி)
Steps should be taken to improve the condition of the farmers. Also employment should be given to graduate students.
Seerappan, farmer (Oddanchatram)

முக்கிய எதிர்பார்ப்புகள்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரள மாநிலத்துக்கும் இங்கிருந்து காய்கறிகள் அனுப்பப்படுகின்றன. தினமும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்லும் இந்த மார்க்கெட்டில் அடிப்படை வசதியை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக உள்ளது. வேளாண் பொருட்களின் விளைச்சல் அதிகரிக்கும் போது விவசாயிகளுக்கு போதிய விலை கிடைப்பதில்லை. இதனால் காய்கறிகளை பதப்படுத்தி வைத்து விலை ஏறும்போது விற்பனை செய்யும் வகையில், ஒட்டன்சத்திரத்தில் காய்கறி குளிர்பதனக்கூடம் அமைக்க வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதேபோல் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் முருங்கை சாகுபடி அதிக அளவில் நடந்து வருகிறது. எனவே ஒட்டன்சத்திரத்தில் முருங்கை பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க வேண்டும். விவசாயத்துக்கு இடையூறாக உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும். தக்காளி உற்பத்தி அதிகமாக இருப்பதால், தக்காளி ஜூஸ் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்பது தொகுதி மக்களின் நீண்டகால விருப்பமாக இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒட்டன்சத்திரம் தயிர் மார்க்கெட் பிரசித்தி பெற்றதாக விளங்கியது. தற்போது படிப்படியாக தயிர் உற்பத்தி குறைந்து கொண்டே இருக்கிறது. இந்த தொழிலை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒட்டன்சத்திரம் தொகுதியில் அரசு கலை கல்லூரி அமைக்க வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை நிறுவி வேலைவாய்ப்பினை ஏற்படுத்த வேண்டும். ஒட்டன்சத்திரம் நகராட்சியின் குடிநீர் ஆதாரமாகவும், விவசாயத்தில் முக்கிய பங்கு வகிப்பதுமான பரப்பலாறு அணையில் தேங்கியுள்ள சுமார் 40 அடி வண்டல் மண்ணை தூர்வார வேண்டும். கண்வலி கிழங்கு கொள்முதல் நிலையத்தை ஒட்டன்சத்திரத்தில் அமைக்க வேண்டும். கொத்தயம் நல்லதங்காள் அணைக்கட்டு பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்ற கோரிக்கை பட்டியல் நீண்ட காலமாக கிடப்பில் உள்ளது.