தர்மபுரி மாவட்டத்தில் புதிய சட்டசபை தொகுதியான பாப்பிரெட்டிப்பட்டி கடந்த 2011-ம்ஆண்டு முதல் தேர்தலை சந்தித்தது. தொகுதி சீரமைப்பின்படி மொரப்பூர் தொகுதியை நீக்கி புதிதாக உருவாக்கப்பட்டது. இந்த...
பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செட்டிக்கரை கிராமத்தில் அரசு பொறியியல் கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது. பாப்பிரெட்டிப்பட்டியில் பெரியார் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. முத்தம்பட்டியில் 33 கிலோ வாட் திறன் கொண்ட புதிய மின்பகிர்மான நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. வத்தல்மலைக்கு புதிய தார்சாலை அமைக்கப்பட்டு உள்ளது. சிந்தல்பாடியில் ரெயில்வே மேம்பாலம், பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. தொகுதியில் 12 புதிய கால்நடை மருத்துவமனைகள், 14 ரேஷன்கடைகள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளன. மெணசி, மோளையானூர், பசுவாபுரம், அம்பாளப்பட்டி, தாளநத்தம், எச்.புதுப்பட்டி, பண்டாரசெட்டிப்பட்டி, மணிபுரம், நடுப்பட்டி, கர்த்தானூர், குருபரஅள்ளி, பாத்திமாநகர் ஆகிய 10 ஊர்களில் 10 புதிய திருமண மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன - உயர் கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன்
அ.தி.மு.க. 2 முறை வென்றுள்ளது
பொம்மிடியில் இருந்து எஸ்.பாளையம், கரடியூர், பூமரத்தூர் வழியாக ஏற்காட்டிற்கு பஸ்வசதி, பொம்மிடியில் இருந்து காளிக்கரம்பு வழியாக நல்லம்பள்ளி, தர்மபுரி பகுதிகளை இணைக்கும் சாலை வசதி போன்ற நீண்டநாள் கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் அதிக அளவில் உற்பத்தியாகும் செண்டுமல்லி, சாமந்தி பூ ஆகியவற்றை சந்தைபடுத்துவதற்கும் மதிப்பு கூட்டு பொருட்களாக மாற்றுவதற்கும் உரிய சிறப்பு திட்டங்கள் இந்த பகுதியில் செயல்படுத்தப்படவில்லை.