கடந்த 2011-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்த தொகுதிகளில் முக்கியமானது ரிஷிவந்தியம் தொகுதி. இங்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் போட்டியிட்டு 91,164 வாக்குகள்...
முஸ்குந்தா நதியின் குறுக்கே ஆற்கவாடி- அரும்பராம்பட்டு, ராவுத்தநல்லூர் - பிரமகுண்டம், பொரசப்பட்டு- சுத்தமலை ஆகிய இடங்களில் உயர்மட்ட பாலம், தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் குடிநீர் பிரச்சினை, பஸ் பயணிகளுக்கு நிழற்குடை , அரசு பள்ளிகள், நியாயவிலைக்கடைகள், அங்கன்வாடி மையங்கள், மருத்துவமனைகளுக்கு கட்டிடங்கள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், மணலூர்பேட்டையில் துணைமின் நிலையம், பஸ்நிலையம், தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.10 கோடி மதிப்பில் 517 வளர்ச்சிப்பணிகள், பகண்டை கூட்டுரோட்டில் ரூ.11 லட்சம் செலவில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், நெடுஞ்சாலைத்துறை மூலம் ரூ.100 கோடியிலும், ஊரக வளர்ச்சிதுறை மூலம் ரூ.104 கோடியிலும் சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளன.- தொகுதி எம்.எல்.ஏ. விஜயகாந்த் சார்பில் விழுப்புரம் மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் எல்.வெங்கடேசன் எம்.எல்.ஏ.
தி.மு.க. 4 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)
காங்கிரஸ் 4 முறை வென்றுள்ளது
அ.தி.மு.க. 1 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)
த.மா.கா எம் 2 முறை வென்றுள்ளது (2 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)
தே.மு.தி.க. 1 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)
கரும்பு கொள்முதல் விலையை அரசு உயர்த்தி வழங்காதது.