தொகுதியில் சென்னை மாநகராட்சியின் 43 முதல் 53 வரையிலான வார்டுகள் இடம் பெற்று உள்ளன. தென்னிந்தியாவில் முதல் ரெயில் நிலையம் அமைக்கப்பட்ட இடம் என்ற பெருமை ராயபுரம் தொகுதிக்கு உண்டு. 1856-ம் ஆண்டில்...
ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் எனது தொகுதி நிதியில் இருந்து ரூ.1 1/2 கோடி செலவில் ரத்த சேமிப்பு வங்கி கட்டப்பட்டுள்ளது. மேலும், ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் ரூ.60 கோடி மதிப்பில் பல்நோக்கு மருத்துவ பிரிவு கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. தாலிக்கு தங்கம் திட்டத்தில் 2 ஆயிரம் பெண்களுக்கு தங்கம் வழங்கப்பட்டுள்ளது. குடிசை மாற்று வாரியம் சார்பில் பார்த்தசாரதி நகரில் 120 அடுக்குமாடி வீடுகள் ரூ.10 கோடி செலவில் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. தொகுதி அலுவலகத்தில் தினமும் மதியம் 12 மணி முதல் 2 மணி வரை பொதுமக்களை சந்தித்து குறைகள் கேட்டு மனுக்களை பெற்று வருகிறேன்.
தி.மு.க. 5 முறை வென்றுள்ளது
அ.தி.மு.க. 5 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)
காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், மீன் விற்பனை செய்ய எங்களுக்கு கடைகள் கட்டித்தருவதாக சொன்னார்கள். ஆனால், இதுவரை அதற்கான பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. கூடுதலாக பஸ்கள் இயக்கப்பட வேண்டும்.