தொகுதிகள்: சோளிங்கநல்லூர்

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
காஞ்சிபுரம்
வாக்காளர்கள்
:
602407
ஆண்
:
302772
பெண்
:
299573
திருநங்கை
:
62

தாம்பரம் சட்டமன்ற தொகுதியில் இடம்பெற்றிருந்த சோழிங்கநல்லூர், கடந்த 2011-ம் ஆண்டு நடந்த தொகுதி மறுசீரமைப்பின் போது பிரிக்கப்பட்டு சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியாக புதிதாக உருவாக்கப்பட்டது. சென்னை...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

பெரும்பாக்கம் உள்பட 4 இடங்களில் ரூ.1 கோடியே 20 லட்சம் செலவில் சமூக நலக்கூடங்கள், 2 இடங்களில் இளைஞர்களுக்காக உடற்பயிற்சி கூடம், 22 இடங்களில் ரேஷன் கடைகள், சிமெண்டு சாலைகள், பூங்கா, சூரியஎரிசக்தி விளக்குகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு கூடங்கள், நீர்த்தேக்க தொட்டிகள், நிழற்குடைகள், கலையரங்கம், நூலகங்கள் என ரூ.10 கோடியே 12 லட்சத்துக்கு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி மூலம் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலங்கள் மூலமாக தரமான சாலைகள், குடிநீர் திட்டப்பணிகள் செய்யப்பட்டு உள்ளது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் மேம்பாலங்கள் அமைக்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டு உள்ளார். தெரு விளக்குகள் எல்.இ.டி. விளக்குகளாக மாற்றப்பட்டு உள்ளன. சட்டசபையில் முதல்-அமைச்சர் 110-வது விதியின் கீழ், மேடவாக்கம் சந்திப்பில் மேம்பாலம் கட்டப்படும் என அறிவித்து உள்ளார். - எம்.எல்.ஏ. கே.பி.கந்தன்

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

அ.தி.மு.க. 1 முறை வென்றுள்ளது

தி.மு.க. 1 முறை வென்றுள்ளது

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

மேடவாக்கம் பகுதியில் இன்னும் பாதாள சாக்கடை திட்டத்தை கொண்டு வரவில்லை. விரைவில் அந்த திட்டத்தை கொண்டு வரவேண்டும்.
ஷீலாஜூலியட் (மேடவாக்கம்)
புழுதிவாக்கம் பஸ் நிலையத்துக்கு அதிகமான மாநகர பஸ்கள் வந்து செல்லும் வகையில் தரம் உயர்த்த வேண்டும்.
தினேஷ் (உள்ளகரம்)
Provide drinking water through pipe connection instead of supplying it with lorries.
Dhinesh (Ullagaram)
கமாட்சி மருத்துவமனை போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மாற்று செய்ய வேண்டும் பெருங்குடி, துரைப்பாக்கம் சுங்கச்சாவடி அகற்றபட வேண்டும் மேடவாக்கம், ஈச்சங்காடு பாலம் வேலைகள் இடையூறு இல்லாமல் மேற்கொள்ள வேண்டும்
Karthick (Chennai)
இப்பகுதி நீர் நிலைகள் அனைத்தும் தூர்வாரபட்டு, நீர் வழிதடங்கள் சரி செய்து முறையாக பராமரிக்கபட வேண்டும் அனைத்து பகுதிக்கும் குடிநீர், கால்வாய் வசதி செய்து தரபட வேண்டும் பள்ளிகரனை, மேடவாக்கம், கோவிலம்பாக்கம், மடிப்பாக்கம், உள்ளகரம் மற்றும் போக்குவரத்து அதிகம் உள்ள பகுதிகளின் சாலைகள் அகலபடுத்தி, செம்மையாக போட்டுதரபட வேண்டும் ஒவ்வொரு பகுதிக்கும் பூங்கா அமைக்கபட வேண்டும்
Karthick (Chennai)

முக்கிய எதிர்பார்ப்புகள்

உள்ளகரம், புழுதிவாக்கம் பகுதிகளில் லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. இதை குழாய் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேடவாக்கம் பகுதியில் கடல் நீரை குடிநீராக்கி சென்னைக்கு செல்லும் குழாய் எங்கள் பகுதி வழியாக செல்கிறது. அந்த திட்டத்தின் மூலம் எங்களுக்கும் குடிநீர் வழங்க வேண்டும். பள்ளிக்கரணையில் பறவைகள் அதிகமாக வந்து செல்கின்றன. இதை சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும்.