தொகுதிகள்: திருசெங்கோடு

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
நாமக்கல்
வாக்காளர்கள்
:
216640
ஆண்
:
106142
பெண்
:
110464
திருநங்கை
:
34

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சட்டசபை தொகுதி கடந்த 1952-ம் ஆண்டு இரட்டை வாக்குரிமை கொண்ட தொகுதியாக உருவாக்கப்பட்டது. இந்த தொகுதியில் கடந்த 1952-ம் ஆண்டு நடந்த தேர்தலில் சுயேச்சை வேட்பாளர்...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

திருச்செங்கோடு அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் பழுதடைந்து இருந்த பள்ளிச்சுற்றுச்சுவர் சீரமைக்கப்பட்டு உள்ளன. உலகப்பம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சைக்கிள் நிறுத்துமிடம், மதிய உணவு அருந்தும் இடம், ஆழ்துளை கிணறு, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைத்து குடிநீர் வசதி, நவீன கழிப்பிட வசதி, தேவனாங்குறிச்சி பள்ளிக்கு ரூ.10 லட்சம் செலவில் தார்சாலை, 59 ஊராட்சிகளில் 52 ஊராட்சிகளுக்கு தெருவிளக்கு, சோலார் மின்விளக்கு, மொளசி, ஆண்டிபாளையம் பகுதியில் சாக்கடை கால்வாய் வசதி, கழிப்பிட வசதி, மல்லசமுத்திரம், பருத்திப்பள்ளி, சோமனம்பட்டியில் 25 ஆண்டுகள் கோரிக்கையான திருமணிமுத்தாறு தரைப்பாலம் அமைத்து தரப்பட்டது. தொகுதியில் உள்ள பள்ளிகளின் சத்துணவு கூடங்களுக்கு கியாஸ் அடுப்பு வழங்கி, எரிவாயு இணைப்பு தர ஏற்பாடு செய்து உள்ளேன். - எம்.எல்.ஏ. சம்பத்குமார்

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

தி.மு.க. 3 முறை வென்றுள்ளது (2 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

அ.தி.மு.க. 7 முறை வென்றுள்ளது (3 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

சி.பி.ஐ. (எம்) 1 முறை வென்றுள்ளது

தே.மு.தி.க. 1 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரியில் எலும்பு முறிவு சிகிச்சை பிரிவு தொடங்கப்படவில்லை. திருச்செங்கோட்டில் போக்குவரத்து நெரிசல் அதிகம்.
பர்வின்பானு (திருச்செங்கோடு)
கிராம மக்களின் வேலைவாய்ப்புக்கு சென்னையில் உள்ளது போல கிராமங்களில் தொழிற்சாலைகளை உருவாக்கி வேலைவாய்ப்பு தந்தால்தான் கிராம மக்கள் நன்றாக வாழ முடியும்.
மாரிமுத்து (மாச்சம்பாளையம்)

முக்கிய எதிர்பார்ப்புகள்

போக்குவரத்து நெரிசல், குறைந்த அளவு நிலத்தடி நீர்மட்டம். தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும். போக்குவரத்து நெரிசலை குறைக்க நகர வட்டப்பாதை (ரிங் ரோடு).