தொகுதிகள்: திருக்கோவிலூர்

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
விழுப்புரம்
வாக்காளர்கள்
:
238179
ஆண்
:
120413
பெண்
:
117732
திருநங்கை
:
34

திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி மிகவும் பழமையானது. 1937-ம் ஆண்டு சென்னை மாகாண சட்டப்பேரவைக்கு பொதுத்தேர்தல் நடந்தது. சென்னை மாகாணம் என்பது இன்றைய தமிழ்நாடு மற்றும் ஒரிசா, கேரளா, கர்நாடகா ஆகிய...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

திருக்கோவிலூர் தொகுதியில் ரூ.200 கோடிக்கு புதிய சாலை பணிகள், ரூ.100 கோடி செலவில் திருக்கோவிலூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கு கிட்டங்கி, பள்ளிக்கூடங்களுக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள், மாணவ- மாணவிகள் தங்கும் விடுதிகள், மருத்துவமனைகளுக்கு கூடுதல் கட்டிடங்கள், ஆற்காடு கிராமத்தில் புதிதாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம், திருக்கோவிலூர் நகரத்தில் நகர ஆரம்ப சுகாதார நிலையம், கால்நடை மருந்தகங்கள், கிளை மருந்தகங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் பிரச்சினையை போக்க சிறிய அளவிலான குடிநீர் தொட்டி, கைப்பம்பு வசதி மற்றும் சிமெண்டு சாலைகள், கழிவுநீர் வடிகால் வாய்க்கால் வசதியை செய்து கொடுக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களுக்கு 15 சமுதாயக்கூடங்கள், 17 அங்கன்வாடி மையங்கள், 10 ரேஷன் கடைகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. திருவெண்ணெய்நல்லூர், திருக்கோவிலூர், அரகண்டநல்லூர், கண்டாச்சிபுரம், மணம்பூண்டி உள்பட 10-க்கும் மேற்பட்ட முக்கிய இடங்களில் பயணியர் நிழற்குடை, திருக்கோவிலூரில் பஸ் நிலையம், கண்டாச்சிபுரத்திலும் புதிய பஸ் நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது.- எம்.எல்.ஏ., எல்.வெங்கடேசன்

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

காங்கிரஸ் 1 முறை வென்றுள்ளது

தி.மு.க. 2 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

தே.மு.தி.க. 1 முறை வென்றுள்ளது

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

அனைத்து பகுதிகளுக்கும் அரசு போக்குவரத்து கழகம் மூலம் பஸ்களை முறையாக இயக்கினால், பள்ளி மாணவ-மாணவிகளுக்கும், பொதுமக்களுக்கும் உதவியாக இருக்கும்.
வீரராகவன் (காணை)
திருக்கோவிலூர் சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் பெரும்பாலான மக்களுக்கு இன்னமும் போதிய மருத்துவ வசதி கிடைக்கவில்லை.
செழியன் (திருக்கோவிலூர்)
விழுப்புரம்- காட்பாடியை இணைக்கும் அரகண்டநல்லூர் வழியே செல்லும் காட்பாடி- சென்னை பயணிகள் ரெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் அரகண்டநல்லூரில் நின்று செல்ல வேண்டும்.
பக்ருதீன் (அரகண்டநல்லூர்)
திருக்கோவிலூரில் அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கையும் அரசால் நிறைவேற்றப்படவில்லை.
மவுண்ட்பேட்டன் பிரபு (திருக்கோவிலூர்)
Katpadi-Chennai trains that cross Arakandanallur should halt here.
Fakrudin (Arakandanallur)

முக்கிய எதிர்பார்ப்புகள்

திருக்கோவிலூர் தொகுதியில் அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததும் தொகுதி மக்களின் அதிருப்தியாக உள்ளது. தொழிற்சாலைகள் எதுவும் இல்லை. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க திருக்கோவிலூரில் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும்.