தொகுதிகள்: திருப்பூர் வடக்கு

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
திருப்பூர்
வாக்காளர்கள்
:
326277
ஆண்
:
168636
பெண்
:
157586
திருநங்கை
:
55

திருப்பூர் மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் திருப்பூர் வடக்கு தொகுதியானது பின்னலாடை தொழிலுக்கு பெயர் பெற்ற திருப்பூர் நகரத்தை தன்னகத்தே கொண்டுள்ளது. கடந்த 2006-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதியில் கிராமப்புறங்களில் தண்ணீர் பிரச்சினையை தீர்க்கும் வகையில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி நிதியில் இருந்து ரூ.2 1/2 கோடி செலவில் 10 இடங்களில் நீரேற்றும் நிலையம் அமைக்கப்பட்டு குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. அதுபோல் தொகுதியில் தேவையான இடங்களில் ரேஷன் கடைகள், கழிப்பிட வசதிகள் முழுமையாக ஏற்படுத்தப்பட்டுள்ளன. 15.வேலம்பாளையம் மாநகராட்சி பள்ளியில் தொகுதி நிதி பங்களிப்புடன் சேர்த்து ரூ.1 கோடி செலவில் புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. தமிழகத்திலேயே திருப்பூர் வடக்கு தொகுதியில் ஒரே வளாகத்தில் 550 நெசவாளர்களுக்கு பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் குடியிருப்புகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது. வடக்கு தொகுதியில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது. நெருப்பெரிச்சல் பகுதியில் பெண் தொழிலாளர்கள் 1,000 பேர் தங்குவதற்கு வசதியாக விடுதிகள் கட்டப்பட்டு வருகிறது.- எம்.எஸ்.எம். ஆனந்தன் எம்.எல்.ஏ.

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

அ.தி.மு.க. 2 முறை வென்றுள்ளது (2 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

கே.ந. Vijayakumar
விஜயகுமார் (திருப்பூர் north)
No basic facilities have been completed for the newly added areas. The Avinasi - Athikadavu scheme should be completed.
Arumugam (Velampalayam)

முக்கிய எதிர்பார்ப்புகள்

திருப்பூர் வடக்கு தொகுதியில் கலை, அறிவியல் கல்லூரி தொடங்கப்படும் என்று தேர்தல் நேரத்தில் தெரிவித்தனர். ஆனால் இதுவரை வடக்கு தொகுதியில் கல்லூரி அமைக்கப்படவில்லை. வடக்கு தொகுதியில் கூடுதலாக ஒரு கல்லூரி அமைக்கும் போது ஊராட்சி பகுதிகளில் உள்ள மாணவ&மாணவிகள் பயன்பெற முடியும். வடக்கு தொகுதியில் உள்ள மாணவ&மாணவிகள் திருப்பூர் மாநகர பகுதியில் உள்ள கல்லூரிகளுக்கு சென்று படிக்க வேண்டியுள்ளது. காந்திநகர், எஸ்.ஏ.பி.சிக்னல், பங்களா ஸ்டாப் பகுதியில் மெயின் ரோட்டில் குடிநீர் குழாய் உடைந்து ரோடு குண்டும், குழியுமாக உள்ளது. அதற்கு நிரந்தர தீர்வு கண்டு சாலையை சீரமைக்காமல் உள்ளனர். இதனால் வாகன ஓட்டிகள் தினமும் அவதியடைந்து வருகிறார்கள். சாய, சலவைப்பட்டறை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண பொது கழிவுநீர் சுத்திகரிப்பு பணியை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று தொழில்துறையினர் எதிர்பார்க்கிறார்கள்.