காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 36. இது காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் அடங்கியுள்ளது. திருப்போரூர், செங்கல்பட்டு, மதுராந்தகம், அச்சரப்பாக்கம், வந்தவாசி,...
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 36. இது காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் அடங்கியுள்ளது. திருப்போரூர், செங்கல்பட்டு, மதுராந்தகம், அச்சரப்பாக்கம், வந்தவாசி, செய்யாறு, காஞ்சிபுரம், அரக்கோணம், திருப்பெரும்புதூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.
வள்ளுவப்பாக்கம், பூசிவாக்கம், ஊத்துக்காடு, கட்டவாக்கம், விளாகம், தாழயம்பட்டு, அளவூர், வாரணவாசி, வெம்பாக்கம், சின்னமதுரப்பாக்கம், ஆரம்பாக்கம், தொள்ளாழி, கோசப்பட்டு, தேவரியம்பாக்கம், தோணங்குளம், உள்ளாவூர், பழையசீவரம், நத்தநல்லூர், புளியம்பாக்கம், வெங்குடி, கீழ் ஒட்டிவாக்கம், சீயமங்கலம், திம்மராஜம்பேட்டை, பாவாசாகிப்பேட்டை, தாங்கி, ஏகனம்பேட்டை, நாயக்கன்பேட்டை, வில்லிவலம், கோயம்பாக்கம், ஏரிவாய், திம்மைய்யன்பேட்டை, முத்தியால்பேட்டை, படப்பம், சின்னய்யங்குளம், கோட்டக்காவல், ஓரிக்கை, கோளிவாக்கம், அய்யங்கார்குளம், புஞ்சரசந்தாங்கல், வளத்தோட்டம், கமுகம்பள்ளம், குருவிமலை, விச்சந்தாங்கல், காலூர், ஆசூர், அவளூர், அங்கம்பாக்கம், தம்மனூர், மேல்புத்தூர், கொளத்தூர், பெருமாநல்லூர், வேடல், களக்காட்டூர், தலையில்லாப்பெரும்பாக்கம், ஆர்ப்பாக்கம், மாகரல், காவாந்தண்டலம், நெல்வேலி, கீழ்புத்தூர், கம்பராஜபுரம், இளையணார்வேலூர், சித்தாத்தூர், மஞ்சமேடு, சூரமேனிக்குப்பம், அயிமிச்சேரி, கோவளமேடு, நாவட்டிக்குளம், திருவங்கரணை, குண்ணவாக்கம், அகரம், தென்னேரி, மடவிளாகம், சிறுபாகல், ஒட்டந்தாங்கல், நாயக்கன்குப்பம், சின்னிவாக்கம், வடவேரிப்பட்டு, மருதம் மற்றும் புத்தகரம் கிராமங்கள் தேனம்பாக்கம் (சென்சஸ் டவுன்), ஐயம்பேட்டை (சென்சஸ் டவுன்), மற்றும் வாலாஜாபாத் (பேரூராட்சி).
காஞ்சீபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள உத்திரமேரூர் தொகுதியானது தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் சமபலமாக வெற்றி கண்ட தொகுதியாகும்.
தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு காஞ்சீபுரம் சட்டமன்ற தொகுதியில் இருந்த மாகரல், ஆற்பாக்கம், களக்காட்டூர், குருவிமலை, காளூர், கீழ்பேரமநல்லூர், இளையனார்வேலூர், காவாந்தண்டலம், சேர்காடு, ஓரிக்கை ஆகிய பகுதிகள் புதிதாக சேர்ந்துள்ளன.
இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 1,91,487 ஆகும். இதில் ஆண் வாக்காளர் 95,358 பேர். பெண் வாக்காளர் 96,112 பேர். திருநங்கைகள் 17 பேரும் இடம் பெற்றுள்ளனர்.
கிராமப்பகுதிகள் நிறைந்த உத்திரமேரூர் தொகுதியில் விவசாயம் மற்றும் நெசவுத் தொழில் சார்ந்தவர்கள் அதிகம் வசிக்கிறார்கள். வன்னியர் 31 சதவீதமும், தாழ்த்தப்பட்டோர் 29 சதவீதமும், முதலியார் 26 சதவீதமும் வாக்காளர்களாக உள்ளனர்.
இத்தொகுதியில் 1967 தேர்தலுக்கு பிறகு திராவிட இயக்கமான தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தலா 5 முறை வென்றுள்ளன. காங்கிரஸ் 2 தடவையும், சுயேச்சை ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது.
ஒவ்வொரு தேர்தலிலும் வென்றவர்கள் வருமாறு:-
1952 தேர்தல்
ராமசாமி முதலியார் (காங்) வெற்றி
பெற்றார்.
1957 தேர்தல்
ராமசாமி முதலியார் (சுயே) 18,385
துரைசாமிநாயக்கர் (காங்) 17,122
1962 தேர்தல்
சீனிவாசரெட்டியார்(காங்) 33,766
துரைசாமிநாயக்கர்(சுயே) 24,276
1967 தேர்தல்
கே.எம்.ராஜகோபால்(தி.மு.க.) 47,689
சீனிவாசரெட்டியார்(காங்) 26,814
1971 தேர்தல்
கே.எம்.ராஜகோபால்(தி.மு.க.) 48,462
சி.ராமசாமி(காங்) 19,896
1977 தேர்தல்
பாக்கூர் சுப்பிரமணியன்
(அ.தி.மு.க.) 34,877
கே.எம்.ராஜகோபால்(தி.மு.க.) 22,294
1980 தேர்தல்
எஸ்.ஜெகத்ரட்சகன்(அ.தி.மு.க.) 43,303
ராமதாஸ்(காங்) 41,717
1984 தேர்தல்
கே.நரசிக்கபல்லவன்
(அ.தி.மு.க.) 57,797
சி.வி.எம்.பொன்மொழி(தி.மு.க.) 40,007
1989 தேர்தல்
கே.சுந்தர்(தி.மு.க.) 31,304
பி.சுந்தர்ராமன்(அ.தி.மு.க-ஜெ) 20,175
1991 தேர்தல்
காஞ்சி பன்னீர்செல்வம்
(அ.தி.மு.க.) 63,367
கே.சுந்தர்(தி.மு.க.) 29,273
1996 தேர்தல்
கே.சுந்தர்(தி.மு.க.) 66,086
என்.கே.ஞானசேகரன்
(அ.தி.மு.க.) 32,994
2001 தேர்தல்
வி.சோமசுந்தரம்(அ.தி.மு.க.) 73,824
கே.சுந்தர்(தி.மு.க.) 46,202
2006 தேர்தல்
கே.சுந்தர்(தி.மு.க.) 70,488
வி.சோமசுந்தரம்(அ.தி.மு.க.) 58,472
டி.முருகேசன்(தே.மு.தி.க.) 10,333
நேரடி மோதல்
தற்போது நடைபெற இருக்கும் தேர்தலில் மீண்டும் தி.மு.க-அ.தி.மு.க. வேட்பாளர்களே நேரடியாக மோதுகின்றனர். தி.மு.க. வேட்பாளராக பொன்.குமார் நிற்கிறார். இவர் தமிழ்நாடு கட்டிட தொழிலாளர் நலவாரிய தலைவராக இருக்கிறார். ஏற்கனவே எம்.எல்.ஏ.வாக இருக்கும் கே.சுந்தருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
அ.தி.மு.க. சார்பில் வாலாஜாபாத் பா.கணேசன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். இவர் ஒன்றிய செயலாளர் ஆவார்.
இத்தொகுதியில் கிட்டத்தட்ட 7 முறை தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் மோதி இருக் கின்றன. தற்போது மீண்டும் இரு கட்சிகளும் பலப்பரீட்சையில் இறங்கி இருக்கின்றன.
கடந்த 2006 தேர்தலில் கே.சுந்தர் (தி.மு.க.) சுமார் 12 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரத்தை வென்றார். சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலிலும் காஞ்சீபுரம் எம்.பி. தொகுதியில் அடங்கிய இத்தொகுதியில் தான் காங்கிரசுக்கு அதிக வாக்குகள் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. தி.மு.க. அரசின் சாதனைகளான 108 ஆம்புலன்ஸ் சேவை, இலவச மருத்துவ காப்பீட்டு திட்டம், கலைஞர் வீடு கட்டும் திட்டம் போன்றவைகளை மக்களிடம் எடுத்துக் கூறி தி.மு.க.வினர் பிரசாரத்தை முடுக்கிவிட இருக்கிறார்கள். அதே நேரத்தில் எதிர் அணியினர் விலைவாசி உயர்வு, தொடர் மின்தடையால் பாதிப்பு, ஸ்பெக்ட்ரம் விவகாரம் ஆகியவைகளை எடுத்துரைத்து வாக்கு சேகரிக்க திட்டமிட்டுள்ளனர்.
பொதுவாக திராவிட இயக்கத்தின் கோட்டையாக திகழும் இந்த உத்திரமேரூர் தொகுதியில் வெற்றி பெறப்போவது ஆளுங்கட்சியான தி.மு.க.வா? அல்லது அ.தி.மு.க.வா? என்பது மிகுந்த எதிர்பார்ப்பு ஆகும்.