தொகுதிகள்: வீரபாண்டி

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
சேலம்
வாக்காளர்கள்
:
239101
ஆண்
:
120835
பெண்
:
118250
திருநங்கை
:
16

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியாக வீரபாண்டி சட்டமன்ற தொகுதி விளங்குகிறது. கடந்த 1957-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில்தான் வீரபாண்டி தொகுதி...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

தொகுதியில் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையான எஸ்.பாப்பாரப்பட்டி, எஸ்.பாலம் ஆகிய ஏரிகளின் ஓரத்தில் நீண்ட தடுப்பு சுவர் அமைக்கப்பட்டுள்ளது. மலைவாழ் மக்கள் வசிக்கும் ஜருகுமலைக்கு 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு தார்சாலை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு தற்போது, முதல் கட்டப்பணிகள் நடந்து வருகிறது. தொகுதிக்குட்பட்ட 52 ஊராட்சிகளில் 5 ஆயிரம் பசுமை வீடுகளும், கைத்தறி நெசவாளர்களுக்கு பசுமை வீடுகளும் கட்டித்தரப்பட்டுள்ளது. வீரபாண்டி, மல்லூர் ஆகிய இடங்களில் பால் குளிரூட்டும் நிலையம் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. பூலாவரி, வீரபாண்டி, முருங்கப்பட்டி, இளம்பிள்ளை ஆகிய இடங்களில் ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. பூலாவரி, ஆட்டையாம்பட்டி, உத்தமசோழபுரம், வேம்படிதாளம், குரால்நத்தம், முருங்கப்பட்டி, அமானிகொண்டலாம்பட்டி ஆகிய இடங்களில் புதிதாக கால்நடை மருத்துவமனை கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி, நவீன சுகாதார வளாகம் போன்றவை கட்டி கொடுத்துள்ளேன். - எம்.எல்.ஏ. எஸ்.கே. செல்வம்

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

தி.மு.க. 5 முறை வென்றுள்ளது (3 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

அ.தி.மு.க. 7 முறை வென்றுள்ளது (4 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

ரேஷனில் சரிவர பொருட்கள் வழங்குவதில்லை. அப்படியே கடைக்கு சென்றாலும் பொருட்கள் வாங்க நீண்டநேரம் காத்திருக்கும் நிலை உள்ளது.
கருப்பண்ணன் (வீரபாண்டி)
எங்கள் பகுதியில் பலருக்கு உதவித்தொகை வருவது நின்றுவிட்டது. பலமுறை தாசில்தாரிடம் முறையிட்டும் பயன் இல்லை. அதுமட்டுமல்ல, கிராமப்புறம் என்பதால் பல இடங்களில் சாலைகள் சீரமைக்கப்படாமல் அப்படியே போட்டு விட்டனர்.
பழனிசாமி (வீரபாண்டி)

முக்கிய எதிர்பார்ப்புகள்

சாலைகள் பழுதாகி சீரமைக்கப்படாமல் உள்ளதால், இருசக்கர வாகனங்கள்கூட செல்ல முடியாத நிலை உள்ளது. மோசமான சாலையில் கனரக வாகனங்கள் புழுதியை கிளப்பியபடி செல்கிறது. குடிநீர் பிரச்சினை தீர்ந்தபாடில்லை. ஆழ்துளை கிணறு அமைத்தும் தண்ணீர் இன்றி பராமரிக்காமல் சில இடங்களில் அப்படியே போட்டுள்ளனர் என்பது மக்களின் எதிர்பார்ப்பு