சி.பி.ஐ.

போட்டியிட்டவை

25

வெற்றிபெற்றவை

0

இந்தியக் பொதுவுடமைக் கட்சி அல்லது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (Communist Party of India) ஓர் இந்திய அரசியல் கட்சியாகும். இக்கட்சி எப்பொழுது தொடங்கப்பட்டது என்பது குறித்து இந்தியக் கம்யூனிச இயக்கத்தில் இரு வேறு கருத்துகள் உள்ளன. டிசம்பர் 26, 1925ஐ தன் நிறுவன நாளாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி குறிப்பிடுகிறது. எனினும், இக்கட்சியிலிருந்து பிளவுற்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இக்கட்சி சோவியத் ஒன்றியத்தில் 1920ல் நிறுவப்பட்டதாக சொல்கிறது. இது இடது முன்னணியின் ஒரு அங்கமாகும்.