தி.மு.க.

போட்டியிட்டவை

174

வெற்றிபெற்றவை

89

திராவிட இன மக்களின் உரிமைகளை, தன்மான உணர்வுகளை, தனித்தன்மையை, தன்னிகரற்ற சிறப்பினைப் பாதுகாத்திடவும், ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்திடவும், `மக்கள் குரலே மகேசன் குரல்’ என்ற தத்துவத்தின் அடிப்படையில், நாடு வாழ, நலிவுகள் தீரப் போராடவும், திராவிட முன்னேற்றக் கழகத்தை (தி.மு.க.) 1949 செப்டம்பர் 17-இல் அறிஞர் அண்ணா என அழைக்கப்படும் டாக்டர் சி.என். அண்ணாதுரை தொடங்கினார். தி.மு.கழகத்தின் வரலாறு என்பது தமிழகத்தில் பகுத்தறிவு இயக்கத்தின், மறுமலர்ச்சி இயக்கத்தின் வரலாறாகும். தமிழ் மொழியையும், தமிழ்ப் பண்பாட்டையும் பாதுகாத்து மேம்படுத்த ஓர் அரசியல் இயக்கம் நடத்திய பேராட்டங்களின் தொகுப்பாகும். தென்னக மக்களின் அடிமைத்தனத்தை அகற்றி சமுதாயம், பொருளாதாரம், அரசியல் துறைகளில் அவர்கள் அதிக இடம் பெறவும், அரசு ...