மனிதநேய மக்கள் கட்சி

போட்டியிட்டவை

4

வெற்றிபெற்றவை

0

மனிதநேய மக்கள் கட்சி தமிழ்நாடு மாநில அரசியற் கட்சியாகும். இது தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பிரிவாக பிப்ரவரி 2009-ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து சேப்பாக்கம், இராமநாதபுரம், ஆம்பூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் ஆம்பூரில் அஸ்லம் பாஷாவும், இராமநாதபுரத்தில் ஜவாஹிருல்லாவும் வெற்றிபெற்று இக்கட்சியின் முதல் சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். மக்கள் உரிமை எனும் அதிகாரப்பூர்வ இதழை இக்கட்சி வெளியிடுகிறது.