ம.தி.மு.க.

போட்டியிட்டவை

29

வெற்றிபெற்றவை

0

1949-ம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தோற்றுவித்த பேரறிஞர் அண்ணா தோழர்கள் அனைவரையும் ‘தம்பி’ என்று பாசத்துடன் அழைத்து, அன்புகாட்டி அரவணைத்து உலகில் வேறு எந்த அரசியல் இயக்கத்திலும் காணமுடியாத குடும்பப் பாச உணர்வுடன் கட்சியைக் கட்டி வளர்த்தார். 18 ஆண்டுகள் அயராத உழைப்பில் காங்கிரசை வீழ்த்தி, 1967-ம் ஆண்டு கழகத்தை ஆட்சி பீடத்தில் அமர்த்தினார். இந்த மண்ணுக்குத் ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டினார். ஆனால் புற்றுநோய்த் தாக்குதலால் உடல்நலம் குன்றி இரண்டு ஆண்டுகளுக்கு உள்ளாக 1969 பிப்ரவரி 3-ம் நாள் இயற்கை எய்தினார். அதன்பின் தி.மு.க. கட்சியின் தலைவரான கருணாநிதி 1991 நவம்பர் 26-ம் தேதி கட்சியின் செயற்குழுவை கூட்டி வைகோவை கட்சியில் இருந்து நீக்க கருணாநிதி முடிவு செய்தார் அச்செயற்குழுவில் வைகோ...