த.மா.கா எம்

போட்டியிட்டவை

26

வெற்றிபெற்றவை

0

தமிழ் மாநில காங்கிரசு அல்லது தமிழ் மாநில காங்கிரஸ் (தமாக) 1996-2002-ல் தமிழ்நாட்டில் செயல்பட்ட ஒரு அரசியல் கட்சி. இதன் தேர்தல் சின்னம் மிதிவண்டி (சைக்கிள்). 1996 சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசின் தேசியத் தலைவர் பி. வி. நரசிம்ம ராவ் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்தார். ஆனால் காங்கிரசின் தமிழ் நாட்டு உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களில் பெரும்பாலானோர் இதனை எதிர்த்தனர். ஜி. கே. மூப்பனார் தலைமையில் பிரிந்து சென்று ”தமிழ் மாநில காங்கிரசு” என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கினார். தமாக 1996 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. 39 இடங்களில் வெற்றி பெற்றது. இத்தேர்தலுடன் நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் திமுகவுடன் இணைந்து போட்டியிட்டு 20 இடங்களில்...