ஆர். பாலசுப்பிரமணி

ஆம்பூர் தொகுதி வேட்பாளராக ஆர்.பாலசுப்பிரமணி அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் வேலூர் மேற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளராக பதவி வகித்து வருகிறார். 1967-ம் ஆண்டு பிறந்த இவர் 10-ம் வகுப்பு வரை படித்துள்ளார். விவசாய குடும்பத்தை சேர்ந்த இவர் ஷு யூனிட் ஷாப் ஒர்க் நடத்தி வருகிறார். இவரது தந்தை ராதாகிருஷ்ணன், தாயார் பத்மாவதி. இவரது மனைவி சங்கீதா பாலசுப்பிரமணி ஆம்பூர் நகரசபை தலைவியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் ஆம்பூர் புதுகோவிந்தாபுரத்தில் வசித்து வருகின்றனர்.

தொகுதிச்சுருக்கம்

மாநிலம்
:
தமிழ்நாடு
வாக்காளர்கள்
:
212246
ஆண்
:
104197
பெண்
:
108048
திருநங்கை
:
1