தொகுதிகள்: ஆலந்தூர்

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
காஞ்சிபுரம்
வாக்காளர்கள்
:
351377
ஆண்
:
175334
பெண்
:
176028
திருநங்கை
:
15

ஆலந்தூர் தொகுதி 1977-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அதற்கு முன் ஆலந்தூர் 1952, 1957 ஆகிய ஆண்டுகளில் சைதாப்பேட்டை தொகுதியிலும், 1967, 1971 ஆகிய ஆண்டுகளில் பரங்கிமலை தொகுதியிலும் இடம்பெற்று...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

ரூ.1 கோடியே 27 லட்சத்தில் பள்ளிகளில் கூடுதல் கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளன. 11 இடங்களில் உயர் கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளது. கோவூரில் ரூ.55 லட்சத்தில் பஸ் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. ரேஷன் கடைகள், சிமெண்டு சாலைகள், பூங்கா, ஆரம்ப சுகாதார துணை நிலையம், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு கூடங்கள், நீர்த்தேக்க தொட்டிகள், நிழற்குடைகள், கலையரங்கம், நூலகங்கள் என ரூ.6 கோடியே 45 லட்சத்துக்கு பணிகள் செய்யப்பட்டு உள்ளன. சென்னை மாநகராட்சியில் ஆலந்தூர் மண்டலத்தின் மூலமாக தரமான சாலைகள், குடிநீர் திட்டப்பணிகள் என ரூ.133 கோடியே 92 லட்சத்தில் 2,371 பணிகளும், ஊராட்சிகளில் ரூ.38 கோடியே 94 லட்சத்தில் 2,122 பணிகளும் செய்யப்பட்டு உள்ளன. சென்னை மாநகராட்சியில் ஆலந்தூர் மண்டலத்தின் மூலமாக தரமான சாலைகள், குடிநீர் திட்டப்பணிகள் என ரூ.133 கோடியே 92 லட்சத்தில் 2,371 பணிகளும், ஊராட்சிகளில் ரூ.38 கோடியே 94 லட்சத்தில் 2,122 பணிகளும் செய்யப்பட்டு உள்ளன. ஆலந்தூர்- ஆதம்பாக்கம் இடையே ரெயில்வே தண்டவாளத்தின் கீழ் சுரங்கப்பாதை அமைக்க ரூ.2 1/2 கோடி ஒதுக்கப்பட்டு, அந்த பணிகளை ரெயில்வே நிர்வாகம் செய்ய வலியுறுத்தப்பட்டு உள்ளது. பழவந்தாங்கல் சுரங்கப்பாதையில் இருந்து நங்கநல்லூருக்கு நேரடி சாலையை ஏற்படுத்த ரூ.9 கோடியில் திட்ட மதிப்பீடு தயார் செய்து அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. கெருகம்பாக்கம்- கவுல்பஜார் இடையே மேம்பாலம் அமைக்க ரூ.6 1/2 கோடி மதிப்பீடு செய்து பணிகள் தொடங்கப்பட உள்ளது. கடந்த ஆட்சி காலத்தில் ஆலந்தூரில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படாத பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.-எம்.எல்.ஏ. வி.என்.பி. வெங்கட்ராமன்

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

அ.தி.மு.க. 5 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

தி.மு.க. 5 முறை வென்றுள்ளது (2 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

நங்கநல்லூரில் மின்சார பிரச்சினையை போக்க துணை மின்நிலையம் அமைக்கப்படாமல் உள்ளது. வீட்டு வரி அதிகமாக உள்ளது. இது சீரமைக்கப்பட வேண்டும். பழவந்தாங்கல் சுரங்கப்பாதையில் இருந்து நங்கநல்லூருக்கு நேரடியாக வர சாலை அமைக்கும் பணியும் நிறைவேற்றப்படவில்லை. குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படவில்லை.
மகேஷ் (நங்கநல்லூர்)
முதியோர், விதவை உள்பட அரசின் உதவி தொகைகள் முறையாக வழங்கப்படாததால் வயதானவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். பாதாள சாக்கடை திட்டத்தையும் நிறைவேற்றி தரவேண்டும்.
பரமேஸ்வரி ராஜூ (முகலிவாக்கம்)
ஆலந்தூர்-ஆதம்பாக்கம் இடையே ரெயில்வே பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கப்படாததால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். புதிதாக குடிநீர் குழாய்களில் தண்ணீர் வினியோகம் செய்யப்படாமல் உள்ளது. பழைய குடிநீர் குழாய்களில் வினியோகம் செய்வதால் கழிவுநீர் கலந்து வருகிறது. இதை சீர் செய்ய வேண்டும்.
தீனதயாளன் (ஆலந்தூர்)

முக்கிய எதிர்பார்ப்புகள்

நந்தம்பாக்கம், முகலிவாக்கம், மணப்பாக்கம் பகுதிகளில் மழை காலங்களில் அடையாறு ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர் ஊருக்குள் புகுந்து விடுவதால் மழைநீர் கால்வாய்கள் அமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. கெருகம்பாக்கம்- கவுல்பஜார் இடையே அடையாறு ஆற்றை கடக்கும் பகுதியில் மேம்பாலம் பணி முடிக்கப்படாமல் 10 ஆண்டுகளுக்கு மேலாக பாதியிலேயே நிற்கிறது. ஆலந்தூர்- ஆதம்பாக்கம் இடையே ரெயில்வே தண்டவாளத்தை கடக்கும் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கப்படவில்லை. ஆலந்தூரில் கூடுதல் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படாததால் மழை காலங்களில் ஆதம்பாக்கம் பகுதிகளில் உள்ள வீடுகளில் கழிவுநீர் புகுந்து விடுகிறது. ஆலந்தூர் பகுதி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டும் வீட்டு வரி சீரமைக்கப்படவில்லை. மழை வெள்ள நிவாரணமும் முழுமையாக கிடைக்கவில்லை. பழவந்தாங்கல் சுரங்கப்பாதையில் இருந்து நங்கநல்லூருக்கு நேரிடையாக வழிப்பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிலுவையில் உள்ளது. ஆலந்தூர், பழவந்தாங்கல், மீனம்பாக்கம், தில்லைகங்கா நகர் என 4 இடங்களில் சுரங்கப்பாதைகள் உள்ளன. மழை காலங்களில் இந்த சுரங்கப்பாதைகள் மழை நீரால் நிரம்பிவிடுகின்றன. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்படுவதால் தில்லைகங்கா நகர் பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.