தொகுதிகள்: அந்தியூர்

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
ஈரோடு
வாக்காளர்கள்
:
207567
ஆண்
:
103397
பெண்
:
104167
திருநங்கை
:
3

பவானி தாலுகாவின் ஒரு பகுதியாக இருந்த அந்தியூர் தொகுதி தற்போது தனி தாலுகாவாக மாறி உள்ளது. தொகுதி மறு சீரமைப்பின்போது கோபி தாலுகாவுக்கு உள்பட்ட பகுதிகளும் அந்தியூர் தொகுதியில் இணைந்தன. பெரும்பாலும்...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

பர்கூர் மலைப்பகுதியில் 4 தொடக்கப்பள்ளிக்கூடங்கள் கட்டப்பட்டு உள்ளன. மலைவாழ் மக்களின் குழந்தைகளுக்காகவே இந்த பள்ளிக்கூடங்கள் கட்டப்பட்டன. அந்தியூர் தொகுதிக்கு உள்பட்ட செல்லம்பாளையம், மாத்தூர் ஆகிய கிராமங்களில் மாதிரி பள்ளிக்கூடங்கள் அமைக்கப்பட்டு ஆங்கில வழிக்கல்வி பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. அந்தியூரை தனி தாலுகாவாக அறிவித்ததுடன், உடனடியாக தாலுகா அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகம் ஆகியவை கொண்டு வரப்பட்டு உள்ளன. சார்பதிவாளர் அலுவலகமும் அந்தியூரிலேயே புதிதாக கட்டப்பட்டு உள்ளது. புதிதாக 5 கால்நடை மருத்துவமனைகள் கட்டப்பட்டு உள்ளன. பர்கூர் மேற்குமலை பகுதியில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம், ரேஷன் கடைகள் கொண்டு வரப்பட்டு உள்ளன. எஸ்.எஸ்.ரமணீதரன் எம்.எல்.ஏ.

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

தி.மு.க. 4 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

அ.தி.மு.க. 6 முறை வென்றுள்ளது (3 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

அ.தி.மு.க. (ஜெ) 1 முறை வென்றுள்ளது

பா.ம.க. 1 முறை வென்றுள்ளது

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

சாலைகள் அமைத்து தரவேண்டும்
Krishna kumar (Chennampatti)
Need a proper market place and subsidy for drip irrigation.
Moorthy (Anthiyur)

முக்கிய எதிர்பார்ப்புகள்

விவசாயம் சார்ந்த தொழில்கள் முக்கிய தொழில்களாக உள்ளன. வாழைக்காய் விளைச்சல் இங்கு பரவலாக நடக்கிறது. அந்தியூரில் இதற்காக தனி சந்தை வசதியும் உள்ளது. வரட்டுப்பள்ளம் அணைக்கட்டு இருந்தாலும் ஏரிகளில் தண்ணீர் நிரப்ப போதிய வசதி இல்லாததால் எப்போதும் வறட்சியையே எதிர்நோக்கி இருக்கும் விவசாய நிலங்கள் உள்ளன. பாசன வசதியும் குறைவாகவே இருக்கிறது. மழைக்காலத்தில் ஏரிகள், அணைகள் நிரம்ப வழிவகை செய்ய வேண்டும். புதிய வாய்க்கால் பாசன திட்டம் வேண்டும் என்பன அந்தியூர் தொகுதி மக்களின் கோரிக்கைகள்.