தொகுதிகள்: ஆற்காடு

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
வேலூர்
வாக்காளர்கள்
:
246513
ஆண்
:
120422
பெண்
:
126091
திருநங்கை
:
0

ஆற்காடு சட்டமன்ற தொகுதி விவசாயத்திற்கு பெயர் பெற்ற தொகுதியாகும். ஆற்காடு சட்டமன்ற தொகுதியில் ஆற்காடு நகரசபை 30 வார்டுகளும் விளாப்பாக்கம், திமிரி, கலவை ஆகிய பேரூராட்சிகள் உள்ளன. மேலும் ஆற்காடு...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

ஆற்காடு தொகுதியில் ரூ.293 கோடி மதிப்பீட்டில் சாலை வசதி, குடிநீர், கழிவுநீர் கால்வாய், பூங்காக்கள் மேம்படுத்துதல், புதிய கட்டிடங்கள் , பல்வேறு திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ரூ.7 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது. புதிய பத்திரப்பதிவு அலுவலக கட்டிடம், வணிகவரி துணை அலுவலக கட்டிடம், மாணவர்கள் தங்கும் விடுதிக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. ரூ.2 1/2 கோடி மதிப்பில் நகரசபைக்கு லிப்ட் வசதியுடன் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. ஆற்காடு நகரில் கண்காணிப்பு கேமராக்களுடன் அதிநவீன குப்பைதொட்டி அமைக்கும் திட்டம் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 48 ஏரிகள் தூர்வாரப்பட்டுள்ளது. ஆற்காடு நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஆரணியிலிருந்து, ஆற்காட்டிற்கு வரும் சாலையில் புறவழிச்சாலை அமைக்க ரூ.1 கோடியே 46 லட்சம் மதிப்பில் நிலம் கையகப்படுத்தும் பணி முடிவடைந்து புதிய சாலை அமைக்க தொகை கணக்கீடு செய்து அரசின் பார்வைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. - எம்.எல்.ஏ. வி.கே.ஆர். சீனிவாசன்

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

தி.மு.க. 5 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

அ.தி.மு.க. 6 முறை வென்றுள்ளது (2 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

பா.ம.க. 1 முறை வென்றுள்ளது

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

Government should take steps to protect weaving industry and the weavers should get insurance and pension.
Jyothibasu (Vilapakkam)
ஆற்காடு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களுக்கு பஸ் வசதி வேண்டும், சுகதரமான குடிநீர் வேண்டும். சுற்றுலா தலங்களை சீர் செய்து நன்கு பராமரித்து போது மக்கள் பார்வைக்கு பயன்பாட்டிற்கு கொண்டு வரலாம்.
ச.சந்தோஷ் குமார் (ஆற்காடு)
புறவழிச்சாலை மிகவும் அதிக முக்கியத்துவமானது. போர்க்கால முன்னுரிமையில் விரைந்து செயல்பட வேண்டும். ஆற்காடு பஜாரில் போக்குவரத்தை குறைக்க இது ஒன்றே வழி.
ராஜேந்திரன் (ஆற்காடு)

முக்கிய எதிர்பார்ப்புகள்

நெசவு தொழிலை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 10 வருடத்திற்கு முன் விளாப்பாக்கத்தில் 150 விசைத்தறிகள் இருந்தன. தற்போது 60 விசைத்தறிகள்தான் உள்ளது. ஆற்காட்டில் நெல் கொள்முதல் நிலையம் செயல்படாமல் உள்ளது. இது செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.