தொகுதிகள்: பவானி

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
ஈரோடு
வாக்காளர்கள்
:
227985
ஆண்
:
113718
பெண்
:
114262
திருநங்கை
:
5

பவானி பக்தி மணம் கமழும் இந்த பெயர் ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் தெரிந்த பகுதி. காவிரியும், பவானியும் கண்ணுக்கு புலப்படாத அமுத நதியும் சங்கமிக்கும் பவானி கூடுதுறை ஆன்மிக உலகத்தில்...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

10 கூட்டுக்குடிநீர் திட்டங்களை கொண்டு வந்திருக்கிறேன். பழைய பஸ் நிலையம் அருகே உள்ள பாலம், கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவில் அருகே பவானி ஆற்றங்கரையில் கரை கட்டி தார் அமைத்தது என்பவற்றை கூறலாம். தற்போது பவானி- தொப்பூர் சுற்றுவட்டச்சாலை பணிகள் நடந்து வருகிறது. பவானி, கவுந்தப்பாடி, அய்யம்பாளையம் பள்ளிக்கூடங்களில் அனைத்து மாணவ- மாணவிகளும் வகுப்பறையில் உட்காரும் வகையில் பெஞ்ச், டெஸ்க் வழங்கப்பட்டு உள்ளது. நெரிஞ்சிப்பேட்டை உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. ஊராட்சி அளவிலும் பல நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகளாகவும், தொடக்கப்பள்ளிக்கூடங்கள் நடுநிலைப்பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டு உள்ளன. - பி.ஜி. நாராயணன் எம்.எல்.ஏ.

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

தி.மு.க. 2 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

அ.தி.மு.க. 7 முறை வென்றுள்ளது (6 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

சுயேட்சை 1 முறை வென்றுள்ளது

பா.ம.க. 1 முறை வென்றுள்ளது

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

பவானி ஜமுக்காள உற்பத்தியை தொழில் நுட்ப ரீதியாக மேம்படுத்த நடவடிக்கை இல்லை. அந்த குறையைபோக்க பவானியில் கைத்தறி தொழில் நுட்ப கல்லூரி வேண்டும்.
ஜெ.திவ்யதர்ஷினி (பவானி)
We request the Government to provide schemes that will prevent Handlooms and Agriculture from becoming extinct.
Subramanian (Bhavani)

முக்கிய எதிர்பார்ப்புகள்

சொட்டு நீர் பாசனதிட்டம் அமைக்க முழு மானியம் வழங்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கை. அடிப்படை வசதிகள் குறைவு பவானி நகரின் நுழைவு வாயிலில் பவானி ஆற்றங்கரையில் உள்ள குறுகிய பாலம், செயல்படாத பழைய பஸ் நிலையம் ஆகியவை தீர்க்க முடியாத பிரச்சினைகளாகவே உள்ளன. பவானி சங்கமேஸ்வரர் கோவில் கூடுதுறை பகுதியில் கூடுதலாக ஒரு பரிகார மண்டபம் கட்டியதை தவிர எந்த வசதிகளும் செய்யப்படவில்லை. குறிப்பாக பக்தர்கள் நீராடும் பகுதியிலேயே குப்பை கூளங்கள் தேங்கி கிடப்பது பரிதாபம்.