தொகுதிகள்: போடிநாயக்கனூர்

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
தேனி
வாக்காளர்கள்
:
257397
ஆண்
:
127456
பெண்
:
129928
திருநங்கை
:
13

ஏலக்காய், காபி, மிளகு போன்ற நறுமணப் பொருட்களின் வாசம் வீசும் தொகுதியாக போடிநாயக்கனூர் திகழ்கிறது. மலை சார்ந்த விவசாயம், வயல்வெளி சாகுபடி, வானம் பார்த்த மானாவாரி நிலங்களில் பயிறு உற்பத்தி என பலவகையான...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

போடியில் ரூ.63 கோடி மதிப்பில் அரசு பொறியியல் கல்லூரியும், கோட்டூரில் ரூ.4 1/2 கோடி மதிப்பில் அரசு பாலிடெக்னிக் கல்லூரியும் தொடங்கப்பட்டுள்ளது. உப்பார்பட்டியில் ரூ.2 கோடியே 87 லட்சம் மதிப்பில் அரசு தொழிற்பயிற்சி பள்ளி கட்டப்பட்டுள்ளது. கோட்டூரில் காமராஜர் பல்கலைக்கழக கல்லூரியில் ரூ.8 கோடி மதிப்பில் நிர்வாக அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. 18-ம் கால்வாயை கொட்டக்குடி ஆறுவரை நீட்டிக்க ரூ.55 கோடியும், பி.டி.ஆர். ஆயக்கட்டு பகுதிகளில் அபிவிருத்தி செய்ய ரூ.5 கோடியே 24 லட்சமும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வைகை அணையில் அய்யனார்புரம்- அம்மச்சியாபுரம் இடையே பாலம் கட்டப்பட்டுள்ளது. முல்லைப்பெரியாற்றில் கோட்டூரில் ரூ.5 கோடியே 34 லட்சம் மதிப்பிலும், பழனிசெட்டிபட்டியில் ரூ.1 கோடி மதிப்பிலும் பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. போடி நகராட்சியில் ரூ.71 கோடியே 10 லட்சம் செலவில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடந்து வருகிறது. - ஓ.பன்னீர் செல்வம் எம்.எல்.ஏ.

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

காங்கிரஸ் 2 முறை வென்றுள்ளது

தி.மு.க. 3 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

அ.தி.மு.க. 6 முறை வென்றுள்ளது (2 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

அ.தி.மு.க. (ஜெ) 1 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

விவசாய நிலங்களில் வன விலங்குகளின் அட்டகாசம் அதிக அளவில் உள்ளது. சாலை வசதி ஏற்படுத்திக் கொடுத்தால் விவசாயிகள் தங்களின் தோட்டங்களுக்கு பாதுகாப்பாக செல்ல முடியும்.
பொன்னுச்சாமி (போடி புதூர்)
குரங்கணியில் இருந்து டாப்ஸ்டேஷனுக்கு சாலை வசதி இல்லை. இதனால் சிறு விவசாயிகள் குதிரைகளிலும், தலைச்சுமையாகவும் விளைபொருட்களை கொண்டு வருகின்றனர்.
மூக்கையா (போடி வலசுதுரை)
எங்கள் ஊரிலேயே கல்லூரி அமைந்து உள்ளதால் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இலவசமாக மடிக்கணினி உள்பட கல்விக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குவது மாணவ- மாணவிகளுக்கு பயனுள்ளதாக இருக்கிறது.
விஷ்ணுபிரியா (போடி)
The new college has been very useful, as I don’t have to travel far for my higher education.
Vishnupriya, College student (Bodinayakanur)

முக்கிய எதிர்பார்ப்புகள்

போடி அருகே குரங்கணியில் இருந்து டாப்ஸ்டேஷன் மலைப்பகுதிக்கு செல்வதற்கு சாலை வசதி கிடையாது. போடி- மதுரை இடையே இயக்கப்பட்ட ரெயில் நிறுத்தப்பட்டு 5 ஆண்டுகள் ஆகியும் மீண்டும் இயக்கப்படாமல் உள்ளதும் இந்த தொகுதி மக்களின் முக்கிய பிரச்சினையாக உள்ளது. இந்த தொகுதியில் வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் தொழிற்சாலைகள் இல்லை. ஆயிரக்கணக்கான ஏக்கரில் மாம்பழம் விளைச்சல் அடையும் நிலையில் மாம்பழக்கூழ் தயாரிக்கும் தொழிற்சாலை, பதப்படுத்தும் நிலையம் போன்றவை அமைக்க வேண்டும் என்பது விவசாயிகளின் பல ஆண்டுகளாக கோரிக்கையாக உள்ளது.