தொகுதிகள்: செங்கல்பட்டு

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
காஞ்சிபுரம்
வாக்காளர்கள்
:
371058
ஆண்
:
183247
பெண்
:
187768
திருநங்கை
:
43

காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ளது செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதி. இங்கு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி, சட்டக்கல்லூரி, மத்திய கலால் அலுவலகம். ஒருங்கிணைந்த கோர்ட்டுகள் உள்ளன. தொழிற்சாலைகள், கல்குவாரிகள்...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

ஆரம்ப சுகாதார தலைமை அலுவலகம் சென்னை சைதாப்பேட்டையிலேயே இயங்கி வந்தது. அந்த அலுவலகம் தற்போது செங்கல்பட்டு யானைக்கால் நோய் தடுப்பு ஆஸ்பத்திரி வளாகத்திற்குள்ளேயே கொண்டு வரப்பட்டுள்ளது. ரூ.55 லட்சத்து 30 ஆயிரம் செலவில் அங்கன்வாடி கட்டிடம், ரூ.2 கோடியே 22 லட்சத்து 95 ஆயிரம் மதிப்பீட்டில் சிமெண்டு சாலைகள், ரூ.89 லட்சத்து 18 ஆயிரம் செலவில் பள்ளிக்கட்டிடம், ரூ.89 லட்சம் செலவில் ரேஷன்கடை கட்டிடங்கள், ரூ.5 லட்சம் செலவில் சூரிய சக்தி விளக்குகள், ரூ.5 லட்சம் செலவில் திடக்கழிவு மேலாண்மைக்கான மிதிவண்டிகள், கலை அரங்க கட்டிடம் கட்டுதல் பணிக்காக ரூ.4 1/2 லட்சம், ஆழ்துளை கிணறுகள் மற்றும் கிணறு வெட்டுதல் பணிக்காக ரூ.46 லட்சத்து 30 ஆயிரம், சமுதாயக்கூடம் கட்டும் பணிக்காக ரூ.35 லட்சம், ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பிரசவ வார்டு கட்டும் பணிக்காக ரூ.22 லட்சம் நிதி ஒதுக்கி பணிகள் செய்யப்பட்டுள்ளன.- அனகை டி.முருகேசன்

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

தி.மு.க. 5 முறை வென்றுள்ளது (4 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

அ.தி.மு.க. 4 முறை வென்றுள்ளது

பா.ம.க. 2 முறை வென்றுள்ளது

தே.மு.தி.க. 1 முறை வென்றுள்ளது

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

காஞ்சீபுரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து செங்கல்பட்டை தனி மாவட்டமாக மாற்ற வேண்டும். தரமான சாலைகள் இல்லை.
செல்வராஜ் (செங்கல்பட்டு)
Complete the six lane road to Bengaluru at a fast pace.
Dr.G.Sadiq Basha (Singaperumalkoil)
Clean city
Sangeetha (chennai)
மழை காலத்தில் MLA எங்க போனாரு, மக்கள் எல்லோரும் பாதிக்கப்பட்டு இருந்த நேரத்தில் போக்குவரத்து பாதித்து மக்கள் அவஸ்தை பட்ட காலத்தில் எந்த MLA வந்து பார்த்தான்...
------ (chengalpattu)

முக்கிய எதிர்பார்ப்புகள்

2003-ம் ஆண்டு ரூ.35 கோடி மதிப்பீட்டில் திருக்கச்சூர் ஆறுமுகம் எம்.எல்.ஏ.வால் கொண்டு வரப்பட்ட பாதாள சாக்கடை திட்டம் இன்னும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. வண்டலூர் பூங்கா அருகே எப்போதும் கூட்ட நெரிசலாக காணப்படுகிறது. அதை தடுக்க அங்குள்ள சாலைகளை அகலப்படுத்தவேண்டும். இதுபோல வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையை விரிவுபடுத்த வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாகும்