தொகுதிகள்: குன்னூர்

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
நீலகிரி
வாக்காளர்கள்
:
186868
ஆண்
:
89978
பெண்
:
96889
திருநங்கை
:
1

நீலகிரி சட்டமன்ற தொகுதியில் இருந்து 1957-ம் ஆண்டு குன்னூர் சட்டமன்ற தொகுதி உருவாக்கப்பட்டது. இது பொது தொகுதியாக அறிவிக்கப்பட்டது. இந்த தொகுதியில் நடந்த முதல் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

தொகுதியில் 5 ஆண்டுகளில் ரூ.10 கோடி அளவில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று உள்ளன. குன்னூர் நகராட்சியை பொருத்தவரை இந்து மயானம், முஸ்லிம், கிறிஸ்தவ கல்லறைகளுக்கு தடுப்பு சுற்றுச்சுவர் அமைத்து கொடுத்து உள்ளேன். 6-வது வார்டுக்குட்பட்ட சின்ன வண்டி சோலை கிராமத்தில் சமுதாய கூடம் அமைப்பதற்கும் நிதி ஒதுக்கப்பட்டது. பேரட்டி ஊராட்சிக்குட்பட்ட மேல் பாரத் நகரில் ஊராட்சி ஒன்றிய ஆங்கில வழிக்கல்விக்காக ரூ.8 லட்சம் செலவில் பள்ளி கட்டிடமும், பந்துமி கிராமத்திற்கு ரூ.12 லட்சம் செலவில் தார் சாலையும் அமைக்கப்பட்டு உள்ளது. இதுமட்டுமின்றி குன்னூர் நகராட்சிக்கு ரூ.1 கோடியே 88 லட்சத்து 98 ஆயிரம் செலவிலும், கோத்தகிரி பேரூராட்சியில் ரூ.1 கோடியே 11 லட்சத்து 75 ஆயிரம் செலவிலும், அதிகரட்டி பேரூராட்சியில் ரூ.79 லட்சத்து 60 ஆயிரமும், உலிக்கல் பேரூராட்சியில் ரூ.49 லட்சத்து 25 ஆயிரமும், ஜெகதளா பேரூராட்சியில் 65 லட்சத்திற்கும் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டன. - எம்.எல்.ஏ. கா.ராமச்சந்திரன்

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

தி.மு.க. 8 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

அ.தி.மு.க. 3 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

த.மா.கா எம் 1 முறை வென்றுள்ளது

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

குன்னூர் பகுதியில் உள்ள சாலைகள் மிகவும் குறுகியதாக உள்ளது. மேலும், சரியான முறையில் வாகன நிறுத்துமிடங்கள் இல்லாததால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களின் வாகனங்கள் சாலையிலேயே நிறுத்த வேண்டி உள்ளது.
உஷா பிராங்ளின் (குன்னூர்)
குன்னூர் பகுதியில் தொழில் வளர்ச்சி இல்லாமல் உள்ளது. இதுமட்டுமின்றி மாவட்டத்தில் பொறியியல் கல்லூரி, மருத்துவக்கல்லூரிகள் இல்லை. இதனால் இங்கு வசிக்கும் கல்லூரி மாணவ-மாணவிகள் சமவெளி பகுதிகளான கோவை, ஈரோடு, நாமக்கல் போன்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
கிப்சன் (குன்னூர்)
குன்னூர் பகுதியில் குடிநீர் பிரச்சினை அதிகரித்து உள்ளது. இதனை போக்குவதற்காக எமரால்டு கூட்டு குடிநீர் திட்டத்தை விரைவில் முடிக்க வேண்டும்.
சுந்தர் (குன்னூர்)

முக்கிய எதிர்பார்ப்புகள்

குன்னூர் சட்டமன்ற தொகுதி விவசாயத்தையும், சுற்றுலாவையும் நம்பியே உள்ளது. இதில் பச்சை தேயிலைக்கு கடந்த சில ஆண்டுகளாக விலை வீழ்ச்சி ஏற்பட்டு வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கான தேயிலை விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுதவிர சாலை, குடிநீர் வசதிகளை செய்து சுற்றுலாவை மேம்படுத்த வேண்டும். அரசு பொறியியல் கல்லூரி அமைக்க வேண்டும் என்பதும் குன்னூர் மக்களின் நீண்டகால கோரிக்கைகள் ஆகும்.