தொகுதிகள்: திண்டுக்கல்

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
திண்டுக்கல்
வாக்காளர்கள்
:
248336
ஆண்
:
121457
பெண்
:
126840
திருநங்கை
:
39

வரலாற்று சிறப்பு மிக்க மலைக்கோட்டையையும், பாரம்பரியமிக்க பூட்டு தொழிலையும் தன்னகத்தே கொண்டதாக திண்டுக்கல் சட்டமன்ற தொகுதி திகழ்கிறது. திண்டுக்கல் மாநகராட்சி மற்றும் தாமரைப்பாடி, குரும்பப்பட்டி,...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

பள்ளி கட்டிடங்கள், அங்கன்வாடி மையங்கள், ரேஷன் கடைகள், குடிநீர் திட்டப்பணிகள், ஆதிதிராவிட மக்களின் வீடு பராமரிப்பு, மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள், காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் கட்டிடங்கள், அரசு ஆஸ்பத்திரிக்கு சிறுநீர் சுத்திகரிப்பு கருவி, நாடகமேடைகள், சமுதாயக்கூடங்கள், நகர்ப்புற, ஊரக பகுதிகளில் தார்ச்சாலைகள், திடக்கழிவு மேலாண்மை, கான்கிரீட் சாலைகள், சித்த மருத்துவ கட்டிடம் உள்ளிட்ட பணிகளுக்கு தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்து 90 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. திண்டுக்கல் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் பல்வேறு பாடப்பிரிவுகள், ஆராய்ச்சி படிப்புகள் என்னுடைய முயற்சியால் கொண்டு வரப்பட்டுள்ளன. காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் - எம்.எல்.ஏ. பாலபாரதி

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

சி.பி.ஐ. (எம்) 6 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

நிறுவன காங்கிரஸ் 1 முறை வென்றுள்ளது

சுயேட்சை 1 முறை வென்றுள்ளது

அ.தி.மு.க. 3 முறை வென்றுள்ளது (3 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

தி.மு.க. 1 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

முடிதிருத்தும் தொழிலாளர்களை எஸ்.சி பட்டியலில் சேர்க்க வேண்டும். முடிதிருத்தும் தொழிலுக்கு தேவையான உபகரணங்களை வழங்க வேண்டும். லஞ்சம் இல்லாத அரசு நிர்வாகத்தை ஏற்படுத்த வேண்டும்.
ஆறுமுகம் (திண்டுக்கல்)
திண்டுக்கல் புறநகர் பகுதியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை. குறிப்பாக பாலகிருஷ்ணாபுரம் ராஜீவ்நகரில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுக்கப்படவில்லை. இதனால் விலை கொடுத்து குடிநீர் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அனுராதா (திண்டுக்கல்)
திண்டுக்கல்லில் கைத்தறி நெசவு பூங்கா அமைக்க வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்றி நகர சாலைகளை விரிவுப்படுத்த வேண்டும். பாதாள சாக்கடை திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
கிருபாகரன் (திண்டுக்கல் வடக்கு)
New bustand
Imam (Dindigul)
There is a need for Handloom Park as most of the weaving industries are based here. Roads need to be expanded and drainage system should be laid underground.
Kirubakaran, merchant (Dindigul)

முக்கிய எதிர்பார்ப்புகள்

நகரின் மேற்கு திசையில் ‘திண்டு‘ போல காட்சி அளிக்கும் மலைக்கோட்டையை சிறந்த சுற்றுலாதலமாக மாற்ற வேண்டும் என்பது திண்டுக்கல் நகர மக்களின் நீண்டநாள் விருப்பமாக இருக்கிறது. திண்டுக்கல்லை சுற்றியுள்ள கிராமங்களில் பூக்கள், காய்கறிகள் உற்பத்தியில் ஏராளமான விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். எனவே பூக்கள் சார்ந்த தொழிற்சாலைகளையும், காய்கறிகளை பதப்படுத்தும் குடோன்களையும் புறநகர் பகுதியில் அமைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டப்பணிகள் முடிவடையாமல் இருப்பதால் நகரவாசிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.