ஆர்.கே. நகர் தொகுதியுடன், தொகுதி மறுசீரமைப்பின்போது ராயபுரம் தொகுதியில் இருந்த 14-வது வட்டம் கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு சேர்க்கப்பட்டது. அதேபோல், ஆர்.கே. நகர் தொகுதியில் இருந்த சில பகுதிகள்...
கத்திவாக்கம் நெடுஞ்சாலையில் ரெயில் பாதைக்கு மேலே மேம்பாலம் கட்டும் பணி 2009-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்டு பாதியில் விடப்பட்டது. அ.தி.மு.க. ஆட்சியில் பாலம் கட்டுவதில் இருந்த பிரச்சினைகள் களையப்பட்டு, தற்போது அந்த பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதேபோல், தண்டையார்பேட்டையில் புதிதாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. இந்த கல்லூரிக்காக புதிய கட்டிடமும், புதிதாக ஐ.டி.ஐ., வட்டாட்சியர் அலுவலகம், ஆர்.டி.ஓ. அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகம், கால்நடை மருத்துவமனை ஆகியவை கட்டப்பட்டு வருகின்றன. மொத்தம் உள்ள 6 ஆயிரம் சோடியம் விளக்குகளும், எல்.இ.டி. விளக்குகளாக மாற்றப்பட்டு வருகின்றன. இதுவரை 4,500 விளக்குகள் எல்.இ.டி. விளக்குகளாக மாற்றப்பட்டுள்ளன. குடிசை மாற்று வாரியம் மூலம் பவர்குப்பத்தில் 556 அடுக்குமாடி குடியிருப்புகளும், ரங்கநாதபுரத்தில் 480 குடியிருப்புகளும் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. சேனியம்மன் கோவில் அருகே 460 குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன.
அ.தி.மு.க. 5 முறை வென்றுள்ளது (3 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)
காங்கிரஸ் 2 முறை வென்றுள்ளது
தி.மு.க. 2 முறை வென்றுள்ளது (2 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)
சுயேட்சை 1 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)
தொகுதியின் பல பகுதிகளில் உள்ள சாலைகள் குறுகலாக இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக குற்றம்சாட்டப்படுகிறது. மேலும், நிலத்தடி நீரில் கச்சா எண்ணெய் மற்றும் கழிவுநீர் கலப்பது முக்கிய பிரச்சினையாக இருக்கிறது.