தொகுதிகள்: எடப்பாடி

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
சேலம்
வாக்காளர்கள்
:
261137
ஆண்
:
133756
பெண்
:
127369
திருநங்கை
:
12

இடைப்பாடி தொகுதி முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியாகும். அமைச்சர் இடைப்பாடி பழனிசாமி போட்டியிட்டு வென்ற தொகுதி ஆகும். இந்த தொகுதியின் எல்லையாக இடைப்பாடி நகராட்சி முழுமையும் இடம் (30 வார்டுகள்)...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

அரசு கலைக்கல்லூரி தொடங்கப்பட்டு அதற்கு தேவையான புதிய கட்டிடம் ரூ.8 கோடியில் கட்டப்பட்டுள்ளது. இடைப்பாடி நகரத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ரூ.50 கோடியில் புறவழிச்சாலை, இடைப்பாடியை தலைமையிடமாக கொண்டு புதிய நெடுஞ்சாலை கோட்டம், அதற்கு புதிய கட்டிடம், புதிய மின்சார வாரிய கோட்ட அலுவலகம், இடைப்பாடி நகராட்சிக்கு ரூ.18 கோடியில் புதிய குடிநீர் திட்டம் போன்றவை நிறைவேற்றப்பட்டுள்ளது. இடைப்பாடி, கொங்கணாபுரம், மகுடஞ்சாவடி, நங்கவள்ளி ஒன்றியங்களுக்கு புதிய குடிநீர் திட்டம், சோரகை, சித்தூர், கொங்கணாபுரம் ஆரம்ப சுகாதார நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. கொங்கணாபுரத்தில் 24 ஏக்கர் பரப்பளவில் சிட்கோ தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது பாலங்கள், புதியதார் சாலை, சாக்கடைவசதி, சாலை தடுப்புகள், புதிய தரம் உயர்த்தப்பட்ட தாலுகா மருத்துவமனை, இடைப்பாடி நகராட்சி பொன்விழா ஆண்டையொட்டி சிறப்பு நிதியாக ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சவுரியூர், செட்டிமாங்குறிச்சி, வெள்ளாளபுரம் பகுதியில் மாதிரிபள்ளி மற்றும் மாணவ- மாணவிகளுக்கு தங்கும் விடுதி, 5 ஆயிரம் பேர்களுக்கு மேல் வீட்டுமனை பட்டா, புதிய ரேஷன்கார்டு வழங்கப்பட்டுள்ளது. சோரகை, பக்கநாடு பகுதியில் புதிதாக கால்நடை மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளது. அரசு நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைபள்ளிகளாகவும், உயர்நிலைபள்ளிகள் மேல்நிலைபள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இடைப்பாடியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாமை நடத்தி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி இருக்கிறோம். - நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் இடைப்பாடி பழனிசாமி

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

தி.மு.க. 2 முறை வென்றுள்ளது

அ.தி.மு.க. 5 முறை வென்றுள்ளது (3 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

காங்கிரஸ் 1 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

அ.தி.மு.க. (ஜெ) 1 முறை வென்றுள்ளது

பா.ம.க. 3 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

Setting up a textile park with added facilities would help the weavers.
Chandrasekar (Edappadi)

முக்கிய எதிர்பார்ப்புகள்

இடைப்பாடி மிகவும் பின்தங்கிய பகுதி. நெசவுத்தொழிலையும், விவசாயத்தையும் நம்பி உள்ள பகுதி. ஆதலால் இப்பகுதியில் நெசவாளர்கள் பயனடையும் வகையில் ஜவுளிப்பூங்கா அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படவில்லை. பெயர் சொல்லும் அளவுக்கு தொழிற்சாலைகள் எதுவும் இல்லை.