தொகுதிகள்: ஈரோடு கிழக்கு

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
ஈரோடு
வாக்காளர்கள்
:
212703
ஆண்
:
104635
பெண்
:
108063
திருநங்கை
:
5

ஈரோடு சட்டமன்ற தொகுதி மறுசீரமைப்புக்கு பின்னர் ஈரோடு கிழக்கு ஈரோடு மேற்கு என்று 2 தொகுதிகளாக பிரிக்கப்பட்டது. எனவே கடந்த தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதி முதல் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஈரோடு...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

ஈரோடு கிழக்கு தொகுதியில் 33 இடங்களில் ரூ.1 கோடியே 14 லட்சத்து 20 ஆயிரம் செலவில் ஆழ்குழாய் குடிநீர் கிணறுகள் அமைத்து உள்ளேன். 22 இடங்களில் குடிநீர் தொட்டியுடன், மின் மோட்டார் இணைத்தும், குடிநீர் குழாய் நீட்டிப்பும் செய்ய ரூ.53 லட்சம் ஒதுக்கீடு செய்து பணிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் புறநோயாளிகள் பிரிவு, சைக்கிள்கள் நிறுத்தும் இடம், சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி திட்டம், எலும்பு முறிவு, தீவிர சிகிச்சை பிரிவுகளுக்கு நவீன உபகரணங்கள் வழங்கியது என 7 பணிகளுக்கு ரூ.1 கோடியே 28 லட்சத்து 11 ஆயிரத்து 500 ஒதுக்கீடு செய்து பணிகளை நிறைவேற்றி இருக்கிறேன்.- வி.சி. சந்திரகுமார் எம்.எல்.ஏ.

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

தே.மு.தி.க. 1 முறை வென்றுள்ளது

அ.தி.மு.க. 1 முறை வென்றுள்ளது

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

எங்கள் பகுதியில் நல்ல ரோடு வசதி, தெருவிளக்கு வசதி ஆகியவை இல்லை. நாங்கள் படிக்கும் சிக்கய்ய நாயக்கர் கல்லூரியை அரசு கல்லூரியாக்க வேண்டும் என்ற நீண்டநாள் கோரிக்கையும் நிறைவேறவில்லை.
ஜெ.உஷா (கருங்கல்பாளையம்)
Sewage system needs to be improved and roads should be maintained properly.
Meenakumari, teacher (Erode (East))

முக்கிய எதிர்பார்ப்புகள்

ஈரோடு மக்களின் நீண்டகால கோரிக்கைகளில் ஒன்றாக இருந்தது மேட்டூர் அணையில் இருந்து குழாய் மூலம் குடிநீர் கொண்டு வருவது. இந்த திட்டத்தை நிறைவேற்றும் வகையில் ஈரோடு மாநகராட்சியாக அறிவிக்கப்பட்ட விழாவில் அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி ஊராட்சிக்கோட்டையில் இருந்து குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டம் நிறைவேற்றப்படும் என்று அறிவித்தார். அதைத்தொடர்ந்து கடந்த தேர்தலின்போது தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படும் என்று அறிவித்தார். மொத்தத்தில் கடந்த 8 ஆண்டுகளாக இந்த அறிவிப்பு நிலுவையில்தான் உள்ளது. 80 அடி சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் கண்டுகொள்ளப்படாமலேயே உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியை பொறுத்தவரை தற்போதைய மிகப்பெரிய பிரச்சினை பாதாள சாக்கடை திட்டம். இந்த திட்டம் எந்த அளவுக்கு வெற்றிபெறும் என்பது கேள்விக்குறியாக இருக்கும் நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக தொல்லை தரும் திட்டமாக இருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஜவுளி தொழிலுக்கு சாயம்போடும் தொழில் மிக அத்தியாவசியமானது. ஆனால் கழிவுகளால் ஏற்படும் பிரச்சினைகளால் தொழில் நசிவடைகிறது. அதை தடுக்க தமிழக அரசு ஒருங்கிணைந்த சுத்திகரிப்பு நிலையம் அறிவித்து இருப்பது வரவேற்கத்தக்கது. இதை செயல்படுத்த வேண்டும்.