தொகுதி சீரமைப்பிற்கு பிறகு தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் வரிசை எண்படி முதல் தொகுதி என்ற தனிச்சிறப்பை கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதி பெற்று உள்ளது. கும்மிடிப்பூண்டி மற்றும் ஊத்துக்கோட்டை ...
கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் ரூ.1 கோடியே 68 லட்சம் செலவில் 24 சமுதாயக்கூடங்களும், ரூ.62 லட்சம் செலவில் 11 ரேஷன் கடைகளுக்கான கட்டிடங்களும் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. தொகுதியில் 35 இடங்களில் ரூ.1 கோடியே 28 லட்சம் செலவில் சிமெண்டு சாலைகளும், 42 இடங்களில் ரூ.1 கோடியே 93 லட்சத்தில் தார் சாலைகளும் அமைக்கப்பட்டுள்ளது. 18 அரசு பள்ளிகளுக்கு ரூ.1 கோடியே 3 லட்சம் செலவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, 10 மகளிர் பள்ளிகளுக்கு ரூ.32 லட்சத்தில் கழிப்பறை கட்டிடங்கள், தொகுதியில் 200 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.15 லட்சம் செலவில் உபகரணங்கள், கும்மிடிப்பூண்டி பஸ் நிலையத்தில் ரூ.25 லட்சத்தில் மேற்கூரை, 15 அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு ரூ.18 லட்சம் செலவில் இருக்கை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.- எம்.எல்.ஏ. சி.எச்.சேகர்
தி.மு.க. 4 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)
அ.தி.மு.க. 7 முறை வென்றுள்ளது (3 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)
தே.மு.தி.க. 1 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)
கும்மிடிப்பூண்டியில் கோர்ட்டு கொண்டு வரப்படும், அரசு கலைக்கல்லூரி அமைக்கப்படும் என்பன இன்னும் அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதியாகவே இருந்து வருகிறது. கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள அரசு சார்ந்த தமிழ்நாடு வெஸ்ட் மேனஜ்மெண்ட் நிறுவனத்தால் ஏற்படும் சுகாதார சீர்கேட்டை தடுத்திடும் வகையில் அதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன தொகுதியில் முக்கிய பிரச்சினைகளாக உள்ளன.