திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதியில் பிரசித்தி பெற்ற ஆன்மிக கோவில்கள் உள்ளன. கலசபாக்கம் சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரை விவசாயிகள், பால் உற்பத்தியாளர்கள், கரும்பு விவசாயிகள், நெசவாளர்கள், செங்கல் ...
கலசபாக்கத்தை தலைமையிடமாக கொண்ட புதிய தாலுகா அலுவலகம். தொகுதி நிதியில் இருந்து ரூ.10 கோடி மதிப்பில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குடிநீர், சாலை வசதி, மின்விளக்கு, அங்கன்வாடி கட்டிடங்கள் அமைத்து தரப்பட்டுள்ளது. கலசபாக்கம் அரசு மருத்துவமனை 100 படுக்கைகள் கொண்ட தாலுகா மருத்துவமனையாக ரூ.4 கோடியே 80 லட்சம் மதிப்பில் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. எலத்தூர் பகுதியில் ரூ.2 கோடியில் புதிய போக்குவரத்து பணிமனை, ரூ.1 கோடியில் நேரடி கொள்முதல் நிலையம், கலசபாக்கத்தில் ரூ.25 லட்சம் மதிப்பில் நிழற்குடை, ஜவ்வாதுமலையில் ரூ.2 கோடி மதிப்பில் புதிய ஐ.டி.ஐ. தொடங்கப்பட்டுள்ளது. ஜவ்வாதுமலையில் ரூ.15 கோடி மதிப்பில் தோட்டக்கலை ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட்டு பணிகள் நடைபெறுகிறது. காரப்பட்டு பகுதியில் ரூ.4 1/2 கோடியில் பாலிடெக்னிக் கல்லூரி, அம்மாபாளையத்தில் அரசு பால்பொருள் உற்பத்தி தொழிற்சாலை திறக்கப்பட்டுள்ளது. - எம்.எல்.ஏ. அக்ரி கிருஷ்ணமூர்த்தி
காங்கிரஸ் 2 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)
தி.மு.க. 5 முறை வென்றுள்ளது (2 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)
அ.தி.மு.க. 5 முறை வென்றுள்ளது (3 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)
புதுப்பாளையத்தில் மலர் சாகுபடியில் அதிக அளவில் விளைச்சல் உள்ளதால் இப்பகுதியில் சென்ட் தொழிற்சாலை அமைக்க வேண்டும். ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி வேண்டும். ஏரிகளை தூர்வார வேண்டும்.