தொகுதிகள்: கன்னியாகுமரி

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
கன்னியாகுமரி
வாக்காளர்கள்
:
279136
ஆண்
:
139238
பெண்
:
139861
திருநங்கை
:
37

கன்னியாகுமரி என்றதும் நாள்தோறும் சுற்றுலா பயணிகளை ஈர்த்து கண்கொள்ளாக் காட்சியாக இருந்து வரும் சூரிய உதயம்- சூரிய அஸ்தமன காட்சிகள், முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம், கடலின் நடுவே பாறைகளில்...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

ரூ.109.85 கோடியில் அழகியபாண்டியபுரம் கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தப்பணி தற்போது தொடங்கி நடந்து வருகிறது. ரூ.76 கோடியில் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை விரிவாக்கம் செய்தது. ரூ.1 1/2 கோடியில் வெங்கலராஜன் வாய்க்காலை சீரமைத்தது ரூ.2 1/2 கோடியில் செங்கட்டி புதிய பாலம் அமைக்கப்பட்டுள்ளது. சுசீந்திரம் தெப்பக்குளம் ரூ.45 லட்சத்தில் சீரமைக்கப்பட்டுள்ளது. மணக்குடி காயல், சுசீந்திரம் குளம், தேரூர் குளம் ஆகிய பகுதிகள் பறவைகள் சரணாலய பகுதியாக அறிவிக்கப்பட்டு அங்கு பல்வேறு பணிகள் செய்யப்பட்டுள்ளன.- எம்.எல்.ஏ. கே.டி. பச்சைமால்

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

காங்கிரஸ் 1 முறை வென்றுள்ளது

தி.மு.க. 5 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

அ.தி.மு.க. 6 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

Replace all the buses which is not suitable for human transportation
டயஸ் (குவைத்)
More facilities should be provided in Chinna Muttam port.
Ravi (Kanniyakumari)

முக்கிய எதிர்பார்ப்புகள்

சர்வதேச சுற்றுலாத்தலமாக விளங்கும் கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத்தலங்கள் மற்றும் ஆன்மிகத்தலங்களை உள்ளடக்கிய இந்த தொகுதிக்கு தினமும் உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகள் பல்லாயிரக்கணக்கில் வந்து செல்கிறார்கள். அதற்கேற்ற வகையில் கன்னியாகுமரி சுற்றுலாத்தலத்தை மேம்படுத்த வேண்டும். பிற மாநில மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வான்வழியாக வந்து செல்ல வசதியாக கன்னியாகுமரியில் ஒரு விமான நிலையம் அமைக்க வேண்டும், கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் குமரி மாவட்ட மீனவர்கள் நடுக்கடலில் இயற்கை இடர்பாட்டினால் சிக்கிக் கொள்ளும்போதும், காணாமல் போகும்போதும் அவர்களை உடனடியாக கண்டுபிடிக்க கன்னியாகுமரியில் ஒரு ஹெலிகாப்டர் தளம் அல்லது நவீன அதிவேக படகு வசதி செய்து தர வேண்டும். கன்னியாகுமரியில் உள்ள ரெயில் நிலையத்தை அனைத்து வசதிகளும் நிறைந்த ரெயில் நிலையமாக தரம் உயர்த்த வேண்டும், கன்னியாகுமரியில் இருந்து நெல்லை, தூத்துக்குடி பகுதிகளுக்கும் கன்னியாகுமரியில் இருந்து நெல்லை, மதுரை மார்க்கமாகவும் பகல்நேர ரெயில்கள் இயக்கப்பட வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு