தொகுதிகள்: காரைக்குடி

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
சிவகங்கை
வாக்காளர்கள்
:
286148
ஆண்
:
141927
பெண்
:
144191
திருநங்கை
:
30

தமிழகத்தில் தமிழுக்கு என்று தமிழ்த்தாய் கோவில் அமைந்துள்ள சிறப்பு மிக்க இடம் காரைக்குடி ஆகும். காரைக்குடி என்றாலே செட்டிநாட்டின் கலைநயமிக்க வீடுகளும், அகன்று விரிந்த வீதிகளும் தான் நினைவுக்கு வரும்....

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

காரைக்குடி - திருச்சி பைபாஸ் சாலையில் ஆவுடைப்பொய்கை எதிரே 1,500 ஏக்கரில் சிப்காட் (தொழிற்பேட்டை) அமைக்கப்பட உள்ளது. காரைக்குடி நகரில் ரூ.112 1/2 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. ரூ.18.50 கோடி மதிப்பீட்டில் குடிநீர் அபிவிருத்தி மேம்பாட்டு பணிகள் நடந்துள்ளன. காரைக்குடி பகுதியில் உள்ள 14 ஊருணிகளை சீரமைக்க ரூ.7 1/2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காரைக்குடி நகராட்சி சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. காரைக்குடியில் புதிய நூலக கட்டிடம், சுற்றுலாத்துறை அலுவலகத்திற்கான கட்டிடம், காரைக்குடி, தேவகோட்டை பகுதிகளில் 8 விடுதிகள் மாணவ-மாணவிகளுக்கான கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. தேவகோட்டை பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் , காரைக்குடியில் உள்ள பொறியியல் கல்லூரிக்கு புதிய விடுதி கட்டிடம் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. தொகுதியில் 11 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 2 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. கண்ணங்குடியில் துணை மின்நிலையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. சருகணி, திருவேகம்பத்தூர், அனுமந்தகுடி, உஞ்சனை ஆகிய இடங்களில் ரூ.24 கோடி மதிப்பீட்டில் பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. மணிமுத்தாற்றில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் அணைக்கட்டு அமைக்கும் பணிகள், ரூ.133 கோடி மதிப்பீட்டில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் சாக்கோட்டை, காரைக்குடி, கண்ணங்குடி பகுதிகளுக்கு குடிநீர் வசதியினை மேம்படுத்த பணிகள் நடந்து வருகின்றன. தொகுதியில் 7 புதிய தானிய சேமிப்பு கிட்டங்கிகள் கட்டப்பட்டுள்ளன. காரைக்குடி அரசு மருத்துவமனை மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. காரைக்குடியில் விரைவுப் போக்குவரத்து கழகத்திற்கான பணிமனை அமைக்கப்பட்டுள்ளது. தொகுதி முழுவதும் மின்வினியோகத்தை சீராக்க அதிக திறன் கொண்ட 100-க்கும் மேற்பட்ட புதிய டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கப்பட்டுள்ளன. 5 புதிய கால்நடை மருத்துவமனைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. - எம்.எல்.ஏ. சோழன் சித.பழனிச்சாமி

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

சுதந்திரா கட்சி 1 முறை வென்றுள்ளது

தி.மு.க. 3 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

அ.தி.மு.க. 4 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

த.மா.கா எம் 1 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

பா.ஜனதா 1 முறை வென்றுள்ளது

காங்கிரஸ் 2 முறை வென்றுள்ளது

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

Need more buses to Sivaganga.
Selvam (Karaikudi)
ஊழலற்ற ஆட்சி வேண்டும்.
Selvakumar (Puduvayal)

முக்கிய எதிர்பார்ப்புகள்

நீண்டகாலமாக வசித்து வரும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும். கால்வாய்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். புதிய தொழிற்சாலைகள் தொடங்க வேண்டும்.